தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4294

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜெரூசலம் நகரம் செழித்து மலரும் போது யஸ்ரிப் (மதீனா) நகரம் இடிந்து சின்னாபின்னமாகி விடும். மதீனா நகரம் இடிந்து சிதைவடைவது மல்ஹமா எனும் மாபெரும் யுத்தத்தின் போதே நிகழும். மல்ஹமா எனும் மாபெரும் போர் கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படும் போதே நிகழும். கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் வெற்றி கொள்ளப்படுவது தஜ்ஜால் வெளிப்படும் போதே நிகழும்.

(பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது கையால், யாரிடம் இந்த செய்தியை கூறினார்களோ அவரை (அதாவது முஆத் பின் ஜபல் (ரலி) ஆகிய என்னுடைய) தொடையிலோ அல்லது தோளிலோ அடித்துவிட்டு  முஆதே! நீ இங்கே அமர்ந்திருப்பது எப்படி உண்மையோ அது போன்று மேற்கண்டவை நிகழ்வது உண்மையாகும் என்று கூறினார்கள்)

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)

(அபூதாவூத்: 4294)

حَدَّثَنَا عَبَّاسٌ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ مَالِكِ بْنِ يَخَامِرَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«عُمْرَانُ بَيْتِ الْمَقْدِسِ خَرَابُ يَثْرِبَ، وَخَرَابُ يَثْرِبَ خُرُوجُ الْمَلْحَمَةِ، وَخُرُوجُ الْمَلْحَمَةِ فَتْحُ قُسْطَنْطِينِيَّةَ، وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ خُرُوجُ الدَّجَّالِ»،

ثُمَّ ضَرَبَ بِيَدِهِ عَلَى فَخِذِ الَّذِي حَدَّثَهُ، – أَوْ مَنْكِبِهِ – ثُمَّ قَالَ: «إِنَّ هَذَا لَحَقٌّ كَمَا أَنَّكَ هَاهُنَا»، أَوْ «كَمَا أَنَّكَ قَاعِدٌ»، يَعْنِي مُعَاذَ بْنَ جَبَلٍ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4294.
Abu-Dawood-Alamiah-3742.
Abu-Dawood-JawamiulKalim-3744.




ஆய்வின் சுருக்கம்:

இந்தச் செய்தி நபியின் சொல்லாகவும், நபித்தோழரின் சொல்லாகவும் வந்துள்ளது. இரண்டு வகையான செய்திகளிலும் விமர்சனம் இருப்பதால் இது பலவீனமாகும்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . அப்பாஸ் பின் அப்துல்அளீம்

3 . ஹாஷிம் பின் காஸிம்-அபுன் நள்ர்

4 . அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் ஸவ்வான்

5 . ஸாபித் பின் ஸவ்வான்

6 . மக்ஹூல் பின் அபூமுஸ்லிம்

7 . ஜுபைர் பின் நுஃபைர்

8 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் யுகாமிர்

9 . முஆத் பின் ஜபல் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21626-இப்னு ஸவ்பான்-அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் ஸவ்பான் அவர்கள் பற்றி துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்றோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இவர் வயதான போது நினைவாற்றலில் தவறு ஏற்பட்டுவிட்டது என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    கூறியுள்ளார்.
  • இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அபூஸுர்ஆ, இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    போன்றோர் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளனர்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் இவரின் செய்திகள் முன்கர்-நிராகரிக்கப்படதக்கவை என்று கூறியுள்ளார்.
  • நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    போன்ற சிலர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/494 , தக்ரீபுத் தஹ்தீப்-1/572)


இந்த செய்தியை அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் அவர்கள் வழியாக அறிவிப்பவர்கள் மாறுபட்ட அறிவிப்பாளர்தொடர்களில் நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

இந்த செய்தியை மக்ஹூல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் அவர்கள், முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் கூற்றாகவே அறிவித்துள்ளார்.


அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் அவர்களின் அறிவிப்புகள்:

  • 1. அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் அவர்களிடமிருந்து அறிவிக்கும்

1 . அலீ பின் ஜஃத்

2 . ஹாஷிம் பின் காஸிம்-அபுன் நள்ர்

3 . ஹைஷம் பின் ஜமீல்

4 . ஹஸ்ஸான் பின் ரபீஃ

ஆகிய 4 பேர், அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் —> ஸாபித் பின் ஸவ்பான் —> மக்ஹூல் —> ஜுபைர் பின் நுஃபைர் —> மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் யுகாமிர் —> முஆத் பின் ஜபல் (ரலி) —> நபி (ஸல்) 
என்ற அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர்.


  • 2 . அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸைத் பின் ஹுபாப் அவர்கள் மட்டும், அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் —> ஸாபித் பின் ஸவ்பான் —> மக்ஹூல் —> முஆத் பின் ஜபல் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் மக்ஹூலுக்கும், முஆத் (ரலி) அவர்களுக்கும் இடையில் இருவரை விட்டுவிட்டு நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.

  • 3 . அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷுரைஹ் பின் யஸீத் அவர்கள் மட்டும், அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் —> ஸாபித் பின் ஸவ்பான் —> மக்ஹூல் —> மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    பின் யுகாமிர் —> முஆத் பின் ஜபல் (ரலி) —> நபி (ஸல்)
    என்ற அறிவிப்பாளர்தொடரில் மக்ஹூலுக்கும், மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    பின் யுகாமிர் அவர்களுக்கும் இடையில்
    ஜுபைர் பின் நுஃபைர் அவர்களை விட்டுவிட்டு நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்

அப்துர்ரஹ்மான் பின் யஸீத் அவர்களின் அறிவிப்புகள்:

  • 1. அப்துர்ரஹ்மான் பின் யஸீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஉஸாமா-ஹம்மாத் பின் உஸாமா அவர்கள் மட்டும், அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் —> மக்ஹூல் —> முஆத் பின் ஜபல் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.

  • 2 . அப்துர்ரஹ்மான் பின் யஸீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    அவர்கள், அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் —> மக்ஹூல்  —> அப்துல்லாஹ் பின் முஹைரீஸ் —> முஆத் பின் ஜபல் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.

இதை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் தனது தாரீகுல் கபீரில் முஅல்லகாக குறிப்பிட்டுள்ளார்.


  • 3 . அப்துர்ரஹ்மான் பின் யஸீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஷுஐப் அவர்களும் வலீதைப் போன்றே, அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் —> மக்ஹூல்  —> அப்துல்லாஹ் பின் முஹைரீஸ் —> முஆத் பின் ஜபல் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.

இதை ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம் பதிவு செய்துள்ளார்.


  • இப்னு கஸீர்,பிறப்பு ஹிஜ்ரி 700
    இறப்பு ஹிஜ்ரி 774
    வயது: 74
    அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்ற சில அறிஞர்கள் இந்த செய்தியை ஹஸன் தரம் என்றும், ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    போன்ற சில அறிஞர்கள் இதை
     பலவீனமானது என்றும் கூறியுள்ளனர்.

  • அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் அவர்களை சுமாரானவர் என்று கருதினாலும் இந்தச் செய்தியில் பலமானவருக்கு மாற்றமாக நபியின் சொல்லாக அறிவித்திருப்பதால் இது முன்கர் என்ற அடிப்படையில் பலவீனமாகும். இதனடிப்படையில் தான் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் இந்தச் செய்தியை முன்கர் என்று கூறியுள்ளார்.
  • அப்துல்லாஹ் பின் முஹைரீஸ் அவர்கள், முஆத் (ரலி) அவர்களின் காலத்தை அடையவில்லை என்பதால் இது முஆத் (ரலி) அவர்களின் சொல் என்றும் கருதமுடியாத பலவீனமான செய்தியாகிறது.

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (6/ 53)
972- وَسُئِلَ عَنْ حَدِيثِ مَالِكِ بْنِ يُخَامِرَ، عَنْ مُعَاذٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: عُمْرَانُ بَيْتِ الْمَقْدِسِ خَرَابٌ لِيَثْرِبَ، وَخَرَابُ يثرب خروج الملحمة، وخروج الملحمة فتح القسطنطينية.
فَقَالَ: يَرْوِيهِ ابْنُ ثَوْبَانَ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ أَبُو حَيْوَةَ شُرَيْحُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، قَالَ: حَدَّثَنِي مَالِكُ بْنُ يُخَامِرَ، عَنْ مُعَاذٍ.
وَخَالَفَهُ عَلِيُّ بْنُ الْجَعْدِ، فَرَوَاهُ عَنِ ابْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ، عَنْ مُعَاذٍ، زَادَ فِي الْإِسْنَادِ جُبَيْرًا، وَاللَّهُ أَعْلَمُ.

இந்தச் செய்தி மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் யுகாமிர்
அவர்கள் வழியாக வருவது பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் குறிப்பிடும்போது அலீ பின் ஜஃத் அவர்கள் மக்ஹூலுக்கும், மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் யுகாமிருக்கும் இடையில் ஜுபைர் பின் நுஃபைரை கூடுதலாக கூறியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். இப்னு ஸவ்பான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷுரைஹ் பின் யஸீத் அவர்கள் அவ்வாறு ஜுபைர் அவர்களை கூறவில்லை. (எனவே அலீ பின் ஜஃத் போன்றோர் அறிவிப்பது அல்மஸீத் ஃபீ இத்திஸாலுஸ் ஸனத் என்ற வகையில் சேரும்.)

(நூல்: அல்இலலுல் வாரிதா-972)


1 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் —> மக்ஹூல் —> முஆத் பின் ஜபல் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-37209 ,

  • அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் —> ஸாபித் பின் ஸவ்பான் —> மக்ஹூல் —> முஆத் பின் ஜபல் (ரலி) —> நபி (ஸல்) 

பார்க்க: அஹ்மத்-22023 ,


  • அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் —> ஸாபித் பின் ஸவ்பான் —> மக்ஹூல் —> ஜுபைர் பின் நுஃபைர் —> மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    பின் யுகாமிர் —> முஆத் பின் ஜபல் (ரலி) —> நபி (ஸல்) 

பார்க்க: முஸ்னத் பின் ஜஃத்-3405 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-37477 , அஹ்மத்-2202322121 , அல்ஃபிதன்-ஹன்பல் பின் இஸ்ஹாக்-25 , அபூதாவூத்-4294 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-519 , அல்முஃஜமுல் கபீர்-214 , …


  • முஸ்னத் பின் ஜஃத்-3405.

مسند ابن الجعد (ص: 489)
3405 – حَدَّثَنَا عَلِيٌّ، أنَا ابْنُ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ مَكْحُولًا، يُحَدِّثُ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عِمْرَانُ بَيْتِ الْمَقْدِسِ خَرَابُ يَثْرِبَ، وَخَرَابُ يَثْرِبَ خُرُوجُ الْمَلْحَمَةِ، وَخُرُوجُ الْمَلْحَمَةِ فَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ، وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ خُرُوجُ الدَّجَّالِ» ثُمَّ ضَرَبَ عَلَى فَخِذِ الرَّجُلِ الَّذِي حَدَّثَهُ مُعَاذٌ أَوْ عَلَى مَنْكِبِهِ ثُمَّ قَالَ: «إِنَّ هَذَا لَحَقٌّ كَمَا أَنَّكَ هَاهُنَا أَوْ كَمَا أَنَّكَ هَاهُنَا قَاعِدٌ»


  • அல்ஃபிதன்-ஹன்பல் பின் இஸ்ஹாக்-25.

الفتن لحنبل بن إسحاق (ص: 119)
25 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خُرُوجُ الْمَلْحَمَةُ فَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ , وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ خُرُوجُ الدَّجَّالِ» ثُمَّ ضَرَبَ عَلَى فَخِذِ الَّذِي حَدَّثَهُ – يَعْنِي مُعَاذًا – أَوْ عَلَى مَنْكِبِهِ , فَقَالَ: «إِنَّ هَذَا الْحَقُّ كَمَا أَنَّكَ هَاهُنَا»


  • அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் —> மக்ஹூல்  —> அப்துல்லாஹ் பின் முஹைரீஸ் —> முஆத் பின் ஜபல் (ரலி)

பார்க்க: தாரீகுல் கபீர்-5/193 , ஹாகிம்-8297 ,


  • தாரீகுல் கபீர்-5/193.

التاريخ الكبير للبخاري (5/ 193 ت المعلمي اليماني):
قَالَ ابْن منذر حَدَّثَنَا الوليد حَدَّثَنَا ابْن جَابِر عَنْ مكحول: عَنْ عَبْدِ اللَّهِ بن محيريز عن معاذ رضى الله عَنْهُ عِمْرَان بيت المقدس خراب يثرب وحضور الملحمة فتح القسطنطينة ثم ضرب مُعَاذ على منكب عُمَر رضي الله عنهما قَالَ: إِنَّهُ لحق،


البداية والنهاية (17/ 67):
وقال الإمام أحمد: حدثنا أبو النضر، حدثنا عبد الرحمن بن ثابت بن ثوبان، عن أبيه، عن مكحول، عن جُبَيْرِ بن نُفَيْر، عن مالك بن يُخَامِر، عن معاذ بن جَبَل، قال: قال رسول اللَّه صلى الله عليه وسلم: “‌عُمرانُ ‌بَيْتِ ‌المَقدسِ خرابُ يَثْرِبَ، وخرابُ يَثْرِبَ خروج الْمَلحَمَة، وخروجُ الملحمةِ فتحُ القُسْطَنطينيةِ، وفتحُ القسطنطينية خروجُ الدّجّال” قال: ثم ضرب بيده على فخذِ الذي حدّثه أو مَنْكبِه، ثم قال: “إنّ هذا لَحقّ كما أنك هاهُنا” أو “كما أنك قاعد” يعني مُعاذَ بن جبل

هكذا رواه أبو داود عن عباس العنبريّ، عن أبي النضر، هاشم بن القاسم به، وهذا إسناد جيّدٌ، وحديثٌ حَسَن، وعليه نُور الصّدق، وجلَالةُ النبوّة وليس المرادُ أن المدينة تخربَ بالكليّة، قبل خروج الدّجال، وإنما ذلك يكون في آخر الزمان، كما سيأتي بيانهُ في الأحاديث الصحيحية، بل يكون عِمَارةُ بَيْت المقدس سببًا في خراب المدينة النبوية، لأن الناس يرحلون منها إلى الشام لأجل الريف والرخص، فإنهُ قد ثبت في الأحاديث الصحيحة: أن الدّجال لا يدخلها، يمنعه من ذلك بما على أنقابها من الملائكة، بايديهم السُّيوفُ المُصْلَتَةُ…


موقع الإسلام سؤال وجواب (4/ 77 بترقيم الشاملة آليا):
وعلى فرض صحته فإن معناه:
أن كُلّ وَاحِد مِنْ هَذِهِ الْأُمُور أَمَارَة لِوُقُوعِ مَا بَعْده، وَإِنْ وَقَعَ هُنَاكَ فترة زمنية بينهما.
(‌عُمْرَان ‌بَيْت ‌الْمَقْدِس) أَيْ: عِمَارَته بِكَثْرَةِ الرِّجَال وَالْعَقَار وَالْمَال.
(خَرَاب يَثْرِب) : أَيْ: سَبَب خَرَاب الْمَدِينَة. وَقَالَ الْقَارِي: أَيْ وَقْت خَرَاب الْمَدِينَة.
ويحتمل أن يكون المراد بعمارة بيت المقدس نزول الخلافة فيه في آخر الزمان.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-22045 .

2 comments on Abu-Dawood-4294

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.