அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உலகஅழிவு நாளில்) மாபெரும் யுத்தம், கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படுவது, தஜ்ஜால் வெளிப்படுவது (போன்ற இம்மூன்றும்) ஏழுமாத (கால)த்திற்குள் நடைப்பெறும்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 22045)حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، وَأَبُو الْيَمَانِ قَالَا: حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ سُفْيَانَ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ يَزِيدَ بْنِ قُطَيْبٍ السَّكُونِيِّ، عَنْ أَبِي بَحْرِيَّةَ قَالَ: أَبُو الْمُغِيرَةِ فِي حَدِيثِهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ قَالَ: سَمِعْتُ مُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْمَلْحَمَةُ الْعُظْمَى وَفَتْحُ الْقُسْطَنْطِينِيَّةِ وَخُرُوجُ الدَّجَّالِ فِي سَبْعَةِ أَشْهُرٍ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22045.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21477.
إسناد ضعيف فيه أبو بكر بن أبي مريم الغساني وهو ضعيف الحديث ، والوليد بن سفيان الغساني وهو مجهول
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூபக்ர் பின் அபூமர்யம் பற்றி நினைவாற்றல் மோசமானவர், பலவீனமானவர், கைவிடப்பட்டவர் என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/490)
- தன் வீட்டில் நடந்த ஒரு திருட்டினால் மூளை குழம்பிவிட்டார் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் கூறியுள்ளார்கள்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1116)
- மேலும் இதில் வரும் அல்வலீத் பின் ஸுஃப்யான் யாரென அறியப்படாதவர்.
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூபஹ்ரிய்யா —> முஆத் பின் ஜபல் (ரலி)
பார்க்க: அஹ்மத்-22045 , இப்னு மாஜா-4092 , அபூதாவூத்-4295 , திர்மிதீ-2238 , அல்முஃஜமுல் கபீர்-173 , 174 , 175 , ஹாகிம்-8313 ,
மேலும் பார்க்க: அஹ்மத்-17691 .
சமீப விமர்சனங்கள்