அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உலகஅழிவு நாளில்) மாபெரும் யுத்தம், கான்ஸ்டாண்டிநோபிள் நகரம் கைப்பற்றப்படுவது (ஆகிய இவ்விரண்டி)ன் இடைப்பட்ட காலங்கள் ஆறு வருடங்களாகும். ஏழாவது வருடத்தில் மஸீஹுத் தஜ்ஜால் வெளிப்படுவான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 17691)حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، حَدَّثَنَا بَقِيَّةُ، حَدَّثَنِي بَحِيرُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ ابْنِ أَبِي بِلَالٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«بَيْنَ الْمَلْحَمَةِ وَفَتْحِ الْمَدِينَةِ سِتُّ سِنِينَ، وَيَخْرُجُ مَسِيحٌ الدَّجَّالُ فِي السَّابِعَةِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-17691.
Musnad-Ahmad-Alamiah-17031.
Musnad-Ahmad-JawamiulKalim-17349.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . ஹைவா பின் ஷுரைஹ்
3 . பகிய்யது பின் வலீத்
4 . பஹீர் பின் ஸஃத்
5 . காலித் பின் மஃதான்
6 . அப்துல்லாஹ் பின் அபூபிலால்
7 . அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9319-பகிய்யது பின் வலீத் தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்.
(நூல்: இக்மாலு தஹ்தீபுல் கமால்-3/6)
الثقات للعجلي ت البستوي (2/ 439):
2294 – بن أبي بِلَال روى عَنهُ خَالِد بن معدان شَامي تَابِعِيّ ثِقَة
- மேலும் இதில் வரும் ராவீ-23568-அப்துல்லாஹ் பின் அபூபிலால் பற்றி இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் அவர்கள் இவர் ஷாம் நாட்டைச் சேர்ந்த தாபிஈ என்றும் பலமானவர் என்றும் கூறியுள்ளார். - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் இவரை பலமானவர்களின் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். (இவரிடமிருந்து காலித் பின் மஃதான் மட்டுமே அறிவித்துள்ளார்.)
(நூல்கள்: அஸ்ஸிகாத்-இஜ்லீ-2294, அஸ்ஸிகாத்-இப்னு ஹிப்பான்-5/49)
- இந்த இருவரும் அறியப்படாதவர்களை பலமானவர்களின் பட்டியலில் கூறுவார்கள் என்பதால் அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்றோர் இவரை அறியப்படாதவர் என்று முடிவு செய்துள்ளனர். - என்றாலும் இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாமின் கருத்தை ஏற்பவர்கள் இவ்வாறு முடிவு செய்ய மாட்டார்கள்.
பகிய்யது பின் வலீத், பஹீர் பின் ஸஃத் போன்றோரிடமிருந்து அறிவிப்பது சரியானது என்பதின்படி வேறுசில அறிஞர்கள் இதை ஹஸன் தரம் என்றும் கூறியுள்ளனர்…
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-17691 , இப்னு மாஜா-4093 , முஸ்னத் பஸ்ஸார்-3505 ,
2 . முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-22045 .
3 . மக்ஹூல் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-37208 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4294 ,
சமீப விமர்சனங்கள்