தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22124

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகை மூன்று நிலைகளாக மாற்றப்பட்டது. நோன்பும் மூன்று நிலைகளாக மாற்றப்பட்டது.

தொழுகையின் நிலைகள்:

முதல் நிலை:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, பதினேழு மாதங்கள் பைத்துல் மக்திஸை (ஜெருசலேம்) முன்னோக்கித் தொழுதார்கள். பிறகு, அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்:

“உமது முகம் வானத்தை நோக்கி அசைவதைக் காண்கிறோம். ஆதலால், நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திருப்புகிறோம். ஆகவே, உம் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம் திருப்புவீராக! நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை அதன் பக்கம் திருப்புங்கள்” (அல்குர்ஆன்: 2:144). அல்லாஹ் நபி ஸல் அவர்களை மக்காவை நோக்கித் திருப்பினான். இது முதல் மாற்றம்.

இரண்டாவது நிலை:

மக்கள் தொழுகைக்காக கூடினர். ஒருவர் மற்றவருக்குத் தொழுகை நேரத்தை அறிவிப்பார்கள். சங்கு ஊதுவது போல் அல்லது சங்கு ஊத நெருங்குவது போல் சப்தம் எழுப்பினார்கள். பிறகு, அப்துல்லாஹ் இப்னு ஸைத் என்று கூறப்படும் அன்சாரித் தோழர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறியதாவது: “இறைத்தூதர் அவர்களே! நான் கனவில் கண்டேன்; நான் தூங்கவில்லை என்று சொன்னால் நான் உண்மையே கூறியிருப்பேன். நான் தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையில் இருந்தபோது, இரண்டு பச்சை நிற ஆடைகளை அணிந்த ஒருவரைக் கண்டேன். அவர் கிப்லாவை முன்னோக்கி நின்றார். பிறகு, “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ்” என இரண்டு இரண்டாக (அதான் சொற்களை) முழுமையாகக் கூறினார். பிறகு சிறிது நேரம் தாமதித்தார். பிறகு, அதேபோல (இகாமத் சொற்களை) கூறினார். ஆனால், அதில் “கத் காமதிஸ் ஸலாஹ், கத் காமதிஸ் ஸலாஹ்” (தொழுகை ஆரம்பித்துவிட்டது, தொழுகை ஆரம்பித்துவிட்டது) என்று கூடுதலாகக் கூறினார்.” அப்போது நபி (ஸல்) அவர்கள், “இதை பிலாலுக்குக் கற்றுக்கொடுங்கள்; அவர் பாங்கு கூறட்டும்.” இவ்வாறு, பிலால் (ரலி) அவர்கள்தான் முதன்முதலில் பாங்கு கூறியவர். உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் வந்து, “இறைத்தூதர் அவர்களே! அவர் கண்டதைப் போன்றே எனக்கும் காட்டப்பட்டது. ஆனால் அவர் என்னை முந்திவிட்டார்” என்று கூறினார்கள். இவை இரண்டாவது மாற்றம்.

மூன்றாவது நிலை:

மக்கள் தொழுகைக்கு வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் சில ரக்அத்துகளைத் தொழுது முடித்திருப்பார்கள். அப்போது ஒருவர் தொழுகைக்கு வந்தபோது, அவர் எத்தனை ரக்அத்துகள் தொழுதார் என்று மற்றவரை சைகை மூலம் கேட்பார். அவர் ஒன்று அல்லது இரண்டு என்று கூறுவார். அதை அவர் தொழுதுவிட்டு, பிறகு மக்களுடன் தொழுகையில் இணைவார். முஆத் (ரலி) அவர்கள் வந்தபோது, “நபி (ஸல்) அவர்களை எந்த நிலையில் நான் பார்க்கிறோனோ அந்த நிலையில் தான் (நான் தொழுகையில்) இருப்பேன். பிறகு நான் தவறிய ரக்அத்துகளைத் தொழுது முடிப்பேன்” என்று கூறினார்கள்.

முஆத் (ரலி) தாமதமாக வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் சில ரக்அத்துகளைத் தொழுது முடித்திருந்தார்கள். முஆத் (ரலி) நபி (ஸல்) அவர்களுடன் (எஞ்சிய ரக்அத்துகளில்) நிலைத்து நின்றார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும், முஆத் (ரலி) எழுந்து விடுபட்ட ரக்அத்துகளைத் தொழுது முடித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “முஆத் உங்களுக்கு ஒரு முறையைக் காட்டித் தந்துள்ளார். அதையே நீங்கள் என் வழிமுறையாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். இவை மூன்றாவது மாற்றம்.

நோன்பின் நிலைகள்:

முதல் நிலை:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள்.


(யஸீத் பின் ஹாரூன் அவர்கள் கூறியதாவது: ரபீவுல் அவ்வல் மாதம் முதல் மறுவருட ரமலான் வரை பத்தொன்பது மாதங்கள், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றார்கள்.)


மேலும், ஆஷுரா நாளிலும் நோன்பு நோற்றார்கள்.

பிறகு அல்லாஹ், “நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று, உங்கள் மீதும் அது கடமையாக்கப்பட்டுள்ளது” (அல்குர்ஆன்:2:183) எனும் வசனம் முதல், “நோன்பு நோற்க சக்தியுடையவர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்” (அல்குர்ஆன்:2:184) எனும் வசனம் வரை அல்லாஹ் இறக்கிவைத்து நோன்பைக் கடமையாக்கினான்.

இப்போது யார் விரும்புகிறாரோ அவர் நோன்பு நோற்பார். யார் விரும்புகிறாரோ அவர் ஒரு ஏழைக்கு உணவளிப்பார். அது அவருக்குப் போதுமானதாக இருந்தது.

இரண்டாவது நிலை:

பிறகு, அல்லாஹ், “ரமலான் மாதம் எதில் குர்ஆன் இறக்கப்பட்டதோ” முதல் “உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்கட்டும்” (அல்குர்ஆன்: 2:185) எனும் வசனத்தை இறக்கினான்.

இதில், அல்லாஹ் நோன்பை ஆரோக்கியமானவர்கள், உள்ளூரில் இருப்பவர்கள் மீது கட்டாயமாக்கினான். நோயாளிக்கும், பயணிக்கும் அதில் சலுகை வழங்கினான். நோன்பு நோற்க முடியாத வயதானவர்களுக்கு உணவு அளிக்கும் சட்டத்தை நிலைப்படுத்தினான். இவை இரண்டாவது மாற்றம்.

மூன்றாவது நிலை:

மக்கள் உறங்காமல் இருக்கும்வரை இரவில் சாப்பிடுவார்கள். பருகுவார்கள். மனைவியருடன் கூடி வாழ்வார்கள். உறங்கிவிட்டால், பிறகு அதைத் தவிர்த்து விடுவார்கள். பிறகு, ஸிர்மா என்று கூறப்படும் அன்சாரித் தோழர் ஒருவர் நோன்பாளியாக வேலை செய்து மாலையாகிவிட்டார். அவர் தன் குடும்பத்தினரிடம் வந்து இஷாவைத் தொழுதார். பிறகு உறங்கிவிட்டார். அவர் காலை வரை சாப்பிடவோ, குடிக்கவோ இல்லை. பிறகு நோன்பாளியாக காலையில் எழுந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்டபோது, அவர் மிகவும் களைப்படைந்திருந்தார். நபி (ஸல்) அவர்கள், “நீர் மிகவும் களைப்படைந்துள்ளதை நான் பார்க்கிறேனே? என்ன விசயம் என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இறைத்தூதர் அவர்களே! நான் நேற்று வேலை செய்தேன். பிறகு வீட்டுக்கு வந்து படுத்து உறங்கிவிட்டேன். நான் எழுந்தபோது நோன்பாளியாக எழுந்தேன்” என்றார்.

மேலும், (அதே நாளில்) உமர் (ரலி) அவர்கள் உறங்கிய பிறகு, அடிமைப் பெண்ணிடமிருந்தோ அல்லது சுதந்திரப் பெண்ணிடமிருந்தோ தன் மனைவியருடன் கூடிவிட்டார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதைத் தெரிவித்தார். அப்போதுதான், “நோன்பின் இரவில் உங்கள் மனைவியருடன் சேர்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது” (அல்குர்ஆன்: 2:187) எனும் வசனத்தை இறக்கினான்.


(இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஸீத் பின் ஹாரூன் அவர்கள் கூறியதாவது: ரபீவுல் அவ்வல் மாதம் முதல் மறுவருட ரமலான் வரை பத்தொன்பது மாதங்கள், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றார்கள்.)

(முஸ்னது அஹ்மத்: 22124)

حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ، وَيَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا الْمَسْعُودِيُّ قَالَ: أَبُو النَّضْرِ فِي حَدِيثِهِ حَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ:

أُحِيلَتِ الصَّلَاةُ ثَلَاثَةَ أَحْوَالٍ، وَأُحِيلَ الصِّيَامُ ثَلَاثَةَ أَحْوَالٍ، فَأَمَّا أَحْوَالُ الصَّلَاةِ: فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ وَهُوَ يُصَلِّي سَبْعَةَ عَشَرَ شَهْرًا إِلَى بَيْتِ الْمَقْدِسِ، ثُمَّ إِنَّ اللَّهَ أَنْزَلَ عَلَيْهِ {قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ، وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ} [البقرة: 144] قَالَ: فَوَجَّهَهُ اللَّهُ إِلَى مَكَّةَ قَالَ: فَهَذَا حَوْلٌ. قَالَ: وَكَانُوا يَجْتَمِعُونَ لِلصَّلَاةِ وَيُؤْذِنُ بِهَا بَعْضُهُمْ بَعْضًا حَتَّى نَقَسُوا أَوْ كَادُوا يَنْقُسُونَ. قَالَ ثُمَّ إِنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ يُقَالُ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي رَأَيْتُ فِيمَا يَرَى النَّائِمُ وَلَوْ قُلْتُ إِنِّي لَمْ أَكُنْ نَائِمًا لَصَدَقْتُ، إِنِّي بَيْنَا أَنَا بَيْنَ النَّائِمِ وَالْيَقْظَانِ إِذْ رَأَيْتُ شَخْصًا عَلَيْهِ ثَوْبَانِ أَخْضَرَانِ فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، فَقَالَ: اللَّهُ أَكْبَرُ. اللَّهُ أَكْبَرُ. أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ. مَثْنَى مَثْنَى حَتَّى فَرَغَ مِنَ الْأَذَانِ، ثُمَّ أَمْهَلَ سَاعَةً. قَالَ: ثُمَّ قَالَ مِثْلَ الَّذِي قَالَ غَيْرَ أَنَّهُ يَزِيدُ فِي ذَلِكَ قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلِّمْهَا بِلَالًا فَلْيُؤَذِّنْ بِهَا» . فَكَانَ بِلَالٌ أَوَّلَ مَنْ أَذَّنَ بِهَا. قَالَ: وَجَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ قَدْ طَافَ بِي مِثْلُ الَّذِي أَطَافَ بِهِ غَيْرَ أَنَّهُ سَبَقَنِي فَهَذَانِ حَوْلَانِ. قَالَ: وَكَانُوا يَأْتُونَ الصَّلَاةَ، وَقَدْ سَبَقَهُمْ بِبَعْضِهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَكَانَ الرَّجُلُ يُشِيرُ إِلَى الرَّجُلِ إِذَا جَاءَ كَمْ صَلَّى؟ فَيَقُولُ: وَاحِدَةً أَوْ اثْنَتَيْنِ فَيُصَلِّيهَا، ثُمَّ يَدْخُلُ مَعَ الْقَوْمِ فِي صَلَاتِهِمْ قَالَ: فَجَاءَ مُعَاذٌ فَقَالَ: لَا أَجِدُهُ عَلَى حَالٍ أَبَدًا إِلَّا كُنْتُ عَلَيْهَا، ثُمَّ قَضَيْتُ مَا سَبَقَنِي. قَالَ: فَجَاءَ وَقَدْ سَبَقَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَعْضِهَا قَالَ: فَثَبَتَ مَعَهُ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَامَ فَقَضَى فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ قَدْ سَنَّ لَكُمْ مُعَاذٌ فَهَكَذَا فَاصْنَعُوا» فَهَذِهِ ثَلَاثَةُ أَحْوَالٍ، وَأَمَّا أَحْوَالُ الصِّيَامِ: فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ فَجَعَلَ يَصُومُ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ، وَقَالَ يَزِيدُ: فَصَامَ تِسْعَةَ عَشَرَ شَهْرًا مِنْ رَبِيعِ الْأَوَّلِ إِلَى رَمَضَانَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ، وَصَامَ يَوْمَ عَاشُورَاءَ ثُمَّ إِنَّ اللَّهَ فَرَضَ عَلَيْهِ الصِّيَامَ، فَأَنْزَلَ اللَّهُ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ} [البقرة: 183] إِلَى هَذِهِ الْآيَةِ {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} [البقرة: 184] قَالَ: فَكَانَ مَنْ شَاءَ صَامَ، وَمَنْ شَاءَ أَطْعَمَ مِسْكِينًا، فَأَجْزَأَ ذَلِكَ عَنْهُ قَالَ: ثُمَّ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْزَلَ الْآيَةَ الْأُخْرَى {شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ} [البقرة: 185] إِلَى قَوْلِهِ {فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ} [البقرة: 185] قَالَ: فَأَثْبَتَ اللَّهُ صِيَامَهُ عَلَى الْمُقِيمِ الصَّحِيحِ، وَرَخَّصَ فِيهِ لِلْمَرِيضِ وَالْمُسَافِرِ وَثَبَّتَ الْإِطْعَامَ لِلْكَبِيرِ الَّذِي لَا يَسْتَطِيعُ الصِّيَامَ، فَهَذَانِ حَوْلَانِ. قَالَ: وَكَانُوا يَأْكُلُونَ وَيَشْرَبُونَ وَيَأْتُونَ النِّسَاءَ مَا لَمْ يَنَامُوا، فَإِذَا نَامُوا امْتَنَعُوا. قَالَ: ثُمَّ إِنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ يُقَالُ لَهُ صِرْمَةُ ظَلَّ يَعْمَلُ صَائِمًا حَتَّى أَمْسَى فَجَاءَ إِلَى أَهْلِهِ فَصَلَّى الْعِشَاءَ، ثُمَّ نَامَ فَلَمْ يَأْكُلْ وَلَمْ يَشْرَبْ حَتَّى أَصْبَحَ فَأَصْبَحَ صَائِمًا قَالَ: فَرَآهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ جَهَدَ جَهْدًا شَدِيدًا قَالَ: «مَا لِي أَرَاكَ قَدْ جَهَدْتَ جَهْدًا شَدِيدًا؟» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي عَمِلْتُ أَمْسِ فَجِئْتُ حِينَ جِئْتُ، فَأَلْقَيْتُ نَفْسِي فَنِمْتُ، وَأَصْبَحْتُ حِينَ أَصْبَحْتُ صَائِمًا. قَالَ: وَكَانَ عُمَرُ قَدْ أَصَابَ مِنَ النِّسَاءِ مِنْ جَارِيَةٍ أَوْ مِنْ حُرَّةٍ بَعْدَ مَا نَامَ، وَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لَهُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ} [البقرة: 187] إِلَى قَوْلِهِ {ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ} [البقرة: 187] وَقَالَ يَزِيدُ فَصَامَ تِسْعَةَ عَشَرَ شَهْرًا مِنْ رَبِيعِ الْأَوَّلِ إِلَى رَمَضَانَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22124.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.