நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் ஒருவர் தன் கையை நோயாளியின் நெற்றியின் மீது அல்லது அவருடைய கையின் மீது வைத்து எப்படி இருக்கின்றீர் என்று கேட்பதே நோயாளியை பூரிபூரணமாக நலம் விசாரிக்கும் முறையாகும். உங்களுக்கிடையே கைகொடுப்பது பரிபூரணமாக வாழ்த்துச் சொல்லும் முறையாகும்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 22236)حَدَّثَنَا خَلَفُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، وَعَلِيُّ بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مِنْ تَمَامِ عِيَادَةِ الْمَرِيضِ أَنْ يَضَعَ أَحَدُكُمْ يَدَهُ عَلَى جَبْهَتِهِ، أَوْ يَدِهِ، فَيَسْأَلُهُ كَيْفَ هُوَ؟ وَتَمَامُ تَحِيَّاتِكُمْ بَيْنَكُمُ الْمُصَافَحَةُ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-21207.
Musnad-Ahmad-Shamila-22236.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21650.
- இந்தச் செய்தியில் علي بن يزيد بن أبي هلال அலீ பின் யஸீத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரை பலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
- திர்மிதீ அவர்கள் இதைப் பதிவு செய்துவிட்டு இது வலுவான அறிவிப்பாளர் தொடர் இல்லை என்றும் இதில் இடம்பெறும் அலீ பின் யஸீத் பலவீனமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
- இமாம் அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் மயீன், அபூ சுர்ஆ, அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
திர்மிதீ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
மற்றும் பலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்(பாகம் 7 : பக்கம் : 397)
மேலும் பார்க்க: திர்மிதீ-2731 .
சமீப விமர்சனங்கள்