தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22236

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

22236. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவர் தன் கையை நோயாளியின் நெற்றியின் மீது அல்லது அவருடைய கையின் மீது வைத்து எப்படி இருக்கின்றீர் என்று கேட்பதே நோயாளியை பூரிபூரணமாக நலம் விசாரிக்கும் முறையாகும். உங்களுக்கிடையே கைகொடுப்பது பரிபூரணமாக வாழ்த்துச் சொல்லும் முறையாகும்.

அறிவிப்பவர் : (ரலி)

அபூஉமாமா (ரலி)

அபூஉமாமா-அல்பாஹிலீ (ரலி) – Abu Umama al-Bahili

இறப்பு: ஹிஜ்ரி 86, ஹிம்ஸ்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: சுதை பின் அஜ்லான் பின் வஹ்ப்

தந்தை பெயர்: அஜ்லான் பின் வஹ்ப்

வம்சம்: அல்பாஹிலீ

புனைப்பெயர்: அபூஉமாமா

பயணித்த ஊர்கள்: மதீனா, எகிப்து, ஹிம்ஸ், ஷாம்

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 86, ஹிம்ஸ்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூஉமாமா ரலி அவர்களின் இயற்பெயர் சுதை பின் அஜ்லான் பின் வஹ்ப் ஆகும். இவர் ஒரு நபித்தோழர். இவர் ஹிஜாஸில் பிறந்தார்.

மதீனா, எகிப்து, ஹிம்ஸ், ஷாம் ஆகிய இடங்களில் வசித்தார். இவர் ஹிஜ்ரி 86 ஆம் ஆண்டு ஹிம்ஸில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபீ தாலிப் (ரலி), அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி), உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி), அம்ர் பின் அப்சா அஸ்ஸலமீ (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): சுலைமான் பின் ஹபீப் அல்மஹாரபீ, ஷத்தாத் பின் அப்துல்லாஹ், முஹம்மத் பின் ஸியாத் அல்அல்ஹானீ, மம்தூர் அஸ்வத் அபூஸல்லாம், மக்ஹூல் அஷ்ஷாமீ, ஷஹ்ர் பின் ஹவ்ஷப் அல்அஷ்அரீ, காஸிம் பின் அப்துர்ரப், ரஜா பின் ஹய்வா, ஸல்ம் பின் அபில் ஜஃத், காலித் பின் மஃதான், அபூ ஃகாலிப் அர்ராஸிபீ, சுலைம் பின் ஆமிர் அல்குலாஈ

வேறு பெயர்கள்: அபூ இமாமா


ஆதாரம்: muslimscholars.info (4048) · Should verify


حَدَّثَنَا خَلَفُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، وَعَلِيُّ بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مِنْ تَمَامِ عِيَادَةِ الْمَرِيضِ أَنْ يَضَعَ أَحَدُكُمْ يَدَهُ عَلَى جَبْهَتِهِ، أَوْ يَدِهِ، فَيَسْأَلُهُ كَيْفَ هُوَ؟ وَتَمَامُ تَحِيَّاتِكُمْ بَيْنَكُمُ الْمُصَافَحَةُ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-21207.
Musnad-Ahmad-Shamila-22236.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21650.



  • இந்தச் செய்தியில் علي بن يزيد بن أبي هلال அலீ பின் யஸீத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரை பலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • திர்மிதீ அவர்கள் இதைப் பதிவு செய்துவிட்டு இது வலுவான அறிவிப்பாளர் தொடர் இல்லை என்றும் இதில் இடம்பெறும் அலீ பின் யஸீத் பலவீனமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
  • இமாம் அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் மயீன், அபூ சுர்ஆ, அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    திர்மிதீ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    மற்றும் பலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்(பாகம் 7 : பக்கம் : 397)

மேலும் பார்க்க: திர்மிதீ-2731 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.