தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22320

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

“என் சமுதாயத்தினரில் ஒரு குழுவினர் மார்க்கத்தில் (அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்திய வண்ணமே) தொடர்ந்து இருப்பார்கள். அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள், அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது. அவர்களுக்கு ஏற்படும் வாழ்வின் சிரமங்கள் (எனும் தீங்கைத்) தவிர. அவர்களை எதிர்ப்பவர்களை அடக்கி வெற்றிக்கொள்வார்கள்.

இறுதியில், அவர்கள் அதே நிலையில் நீடித்திருக்க, அல்லாஹ்வின் ஆணை (இறுதி நாள்) அவர்களிடம் வரும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் எங்குள்ளனர்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் (ஜெருஸலமிலுள்ள) பைத்துல் மக்திஸிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளனர்” என்று பதிலளித்தார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 22320)

قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: وَجَدْتُ فِي كِتَابِ أَبِي بِخَطِّ يَدِهِ: حَدَّثَنِي مَهْدِيُّ بْنُ جَعْفَرٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا ضَمْرَةُ، عَنِ السَّيْبَانِيِّ وَاسْمُهُ يَحْيَى بْنُ أَبِي عَمْرٍو، عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ الْحَضْرَمِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الدِّينِ ظَاهِرِينَ لَعَدُوِّهِمْ قَاهِرِينَ لَا يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ إِلَّا مَا أَصَابَهُمْ مِنْ لَأْوَاءَ حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ وَهُمْ كَذَلِكَ» .

قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَأَيْنَ هُمْ؟ قَالَ: «بِبَيْتِ الْمَقْدِسِ وَأَكْنَافِ بَيْتِ الْمَقْدِسِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-21286.
Musnad-Ahmad-Shamila-22320.
Musnad-Ahmad-Alamiah-21286.
Musnad-Ahmad-JawamiulKalim-21730.




சரியான ஹதீஸ் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7643 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.