தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22910

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (அல்லாஹ்வின்) ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறு உங்களுக்கு உத்தரவிடுகிறேன். அவை:

1 . (தலைவரின் ஆணையைச்) செவியேற்றல்.

2 . (தலைமைக்குக்) கட்டுப்படல்.

3 . சமூகக் கட்டமைப்பு(டன் இணைந்திருத்தல்)

4 . (அவசியம் நேர்ந்தால்) புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) செல்லல்.

5 . அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல் ஆகியவையாகும்.

ஒருவர் சமூகக் கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவு வெளியேரினாலும் அவர் (மீண்டும் அதனுள்) திரும்பி வரும்வரை இஸ்லாம் எனும் கட்டைத் தமது தலையிலிருந்து கழற்றிக் கொண்டுவிட்டார். யார் அறியாமைக் கலாசாரத்திற்கு அழைப்பு விடுக்கிறாரோ அவர் நரக குவியலுக்குச் செல்பவர்களில் உள்ளவர் ஆவார்.

(இவ்வாறு நபி (ஸல் அவர்கள் சொன்னபோது, ‘அல்லாஹ்வின் தூதரே! அவர் நோன்பு நோற்றாலும் தொழுதாலுமா?’ என்று ஒரு மனிதர் கேட்டார். “(ஆம்) அவர் நோன்பு நோற்றாலும் தொழுதாலும் சரியா! (நரகத்துக்குத் தான் செல்வார்). ஆயினும் (இவர்கள் முஸ்லிம்கள்தாம். இவர்களை) அல்லாஹ் உங்களைப் பெயர் சூட்டி அழைப்பதைப் போன்றே இபாதுல்லாஹ் (அல்லாஹ்வின் அடியார்கள்); முஸ்லிம்கள் (இறைவனுக்கு கீழ்படிபவர்கள்); முஃமின்கள் (இறைநம்பிக்கையாளர்கள்) என்றே அழையுங்கள்” என்று நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹாரிஸ் பின் ஹாரிஸ் அல்அஷ்அரீ (ரலி

(முஸ்னது அஹ்மத்: 22910)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ، عَنْ جَدِّهِ مَمْطُورٍ، عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أُرَاهُ أَبَا مَالِكٍ الْأَشْعَرِيَّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

وَأَنَا آمُرُكُمْ بِخَمْسٍ آمُرُكُمْ: بِالسَّمْعِ وَالطَّاعَةِ، وَالْجَمَاعَةِ، وَالْهِجْرَةِ، وَالْجِهَادِ فِي سَبِيلِ اللَّهِ. فَمَنْ خَرَجَ مِنَ الْجَمَاعَةِ قِيدَ شِبْرٍ فَقَدْ خَلَعَ رِبْقَةَ الْإِسْلَامِ مِنْ رَأْسِهِ. وَمَنْ دَعَا دَعْوَى الْجَاهِلِيَّةِ فَهُوَ جُثَاءُ جَهَنَّمَ “. قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، وَإِنْ صَامَ وَصَلَّى؟ قَالَ: «نَعَمْ. وَإِنْ صَامَ وَصَلَّى، وَلَكِنْ تَسَمَّوْا بِاسْمِ اللَّهِ الَّذِي سَمَّاكُمْ عِبَادَ اللَّهِ الْمُسْلِمِينَ الْمُؤْمِنِينَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-22910.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22310.




மேலும் பார்க்க: அஹ்மத்-17170 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.