தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-2329

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும், சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், நன்மையை ஏவி, தீமையைத் தடுக்காதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 2329)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مُحَمَّدٍ، وَسَمِعْتُهُ أَنَا مِنْ عُثْمَانَ بْنِ مُحَمَّدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ لَيْثٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرِ الْكَبِيرَ، وَيَرْحَمِ الصَّغِيرَ وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَيَنْهَى عَنِ الْمُنْكَرِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-2329.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-2243.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் மூளைக்குழம்பிவிட்டார். இவரின் எந்த செய்திகள் சரியானவை எந்த செய்திகள் தவறானவை என பிரித்து அறியமுடியவில்லை; எனவே இவர் கைவிடப்பட்டு விட்டார் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/484, தக்ரீபுத் தஹ்தீப்-5721)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-458 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.