தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23455

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பிலால் பின் யஹ்யா கூறியதாவது:

ஹுதைஃபா (ரலி) அவர்கள் யாரேனும் மரணித்தால் அவரின் மரணச் செய்தியை அறிவிக்க வேண்டாம் எனக் கூறுவார்கள்.

ஏனெனில் மரண அறிவிப்புச் செய்வதில் இது சேருமோ என்று நான் பயப்படுகிறேன். மரண அறிவிப்புச் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியேற்றுள்ளேன் என்றும் கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 23455)

حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ سُلَيْمٍ الْعَبْسِيُّ، عَنْ بِلَالٍ الْعَبْسِيِّ ، عَنْ حُذَيْفَةَ،

أَنَّهُ كَانَ إِذَا مَاتَ لَهُ مَيِّتٌ قَالَ: لَا تُؤْذِنُوا بِهِ أَحَدًا، إِنِّي أَخَافُ أَنْ يَكُونَ نَعْيًا، «إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنِ النَّعْيِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-23455.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-22836.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹபீப் பின் ஸுலைம் என்பவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே நம்பகமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார்.
  • சிலர் பிலால் பின் யஹ்யா, ஹுதைஃபா (ரலி) யிடம் செவியேற்கவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் பார்க்க : திர்மிதீ-986 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.