தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-23636

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

“உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் சிறிய இணை வைப்பைத் தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதற்கு நபித்தோழர்கள்) “சிறிய இணைவைப்பு என்றால் என்ன? அல்லாஹ்வின் தூதரே” என்று கேட்டார்கள். “அது, (ஒரு நல்லறத்தைப் பிறருக்கு காட்ட வேண்டுமென) முகஸ்துதிக்குச் செய்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

மேலும், “மனிதர்களுக்கு கூலிகள் வழங்கப்படும் மறுமை நாளில் (முகஸ்திக்காக அமல் செய்த) நபர்களிடம், பூமியில் யாருக்கு காட்டுவதற்காக அமல் செய்தீர்களோ அவர்களிடம் சென்று, நீங்கள் கூலியை பெறுவீர்களா? கவனியுங்கள் என அல்லாஹ் கூறுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 23636)

قَالَ عَبْدُ اللَّهِ: وَجَدْتُ هَذَا الْحَدِيثَ فِي كِتَابِ أَبِي بِخَطِّ يَدِهِ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ قَتَادَةَ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمُ الشِّرْكُ الْأَصْغَرُ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا الشِّرْكُ الْأَصْغَرُ؟ قَالَ: «الرِّيَاءُ» إِنَّ اللَّهَ يَقُولُ: «يَوْمَ تُجَازَى الْعِبَادُ بِأَعْمَالِهِمْ اذْهَبُوا إِلَى الَّذِينَ كُنْتُمْ تُرَاءُونَ بِأَعْمَالِكُمْ فِي الدُّنْيَا، فَانْظُرُوا هَلْ تَجِدُونَ عِنْدَهُمْ جَزَاءً»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-22523.
Musnad-Ahmad-Shamila-23636.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23011.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-43871-மஹ்மூத் பின் லபீத் பின் உக்பா அவர்கள் நபித்தோழரா? இல்லையா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

1 . இமாம் இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அபூஸுர்ஆ, மிஸ்ஸீ ஆகியோர் இவரை மூத்த தாபிஈன்களில் ஒருவராக குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவர்களில் சிலர், இவர் நபி (ஸல்) காலத்தில் பிறந்தவர் தான் என்றாலும் நபி (ஸல்) அவர்களை பார்க்கவில்லை. அவர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கேட்கவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

(இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள், இவர் நபி (ஸல்) அவர்களை பார்த்துள்ளார் என்பதால் இவரை நபித்தோழரின் பட்டியலிலும், அவர்களிடமிருந்து ஹதீஸைக் கேட்கவில்லை என்பதால் தாபிஈன்களின் பட்டியலிலும் கூறியுள்ளார்)

2 . இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
திர்மிதீ, அபூநுஐம், யஃகூப் பின் ஷைபா,பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
அபூபக்ர் பின் அபூகைஸமா, இப்னு ஸுபர், அபூஉமர், அஸ்கரீ, இப்னு அப்துல்பர், தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்ற பலர் இவரை சிறிய வயது நபித்தோழராக குறிப்பிட்டுள்ளனர். இவர் நபி (ஸல்) காலத்தில் பிறந்தவர்; நபி (ஸல்) அவர்களை பார்த்துள்ளார். அவர்களிடமிருந்து சில ஹதீஸ்களை கேட்டுள்ளார். இவர் அதிகமாக நபித்தோழர்களிடமிருந்தும் அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளனர்.

மேற்கண்ட இரு கருத்துக்களில் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் போன்றோரின் கருத்துக்கு  ஆதாரம் இருப்பதால் இவரை சிறிய வயது நபித்தோழர் என்றே பிற்கால அறிஞர்களான இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/289, அஸ்ஸிகாத்-3/397, 5/434, தஹ்தீபுல் கமால்-27/309, இக்மாலு தஹ்தீபுல் கமால்-11/102, அல்இஸாபா-10/67, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/483, அல்ஜாமிஉ ஃபில்ஜர்ஹி வத்தஃதீல்-4241, அல்இனாபா-942, தஹ்தீபுத் தஹ்தீப்-4/37, தக்ரீபுத் தஹ்தீப்-1/925)

  • இந்த செய்தியை அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத் அவர்களிடமிருந்து இப்ராஹீம் பின் அபுல்அப்பாஸ், இஸ்ஹாக் பின் ஈஸா ஆகியோர் அறிவித்துள்ளனர். இருவரும் பக்தாதைத் சேர்ந்தவர்கள். அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத் பக்தாதுக்கு சென்ற பின் மூளைக்குழம்பி விட்டார். எனவே இவர் பக்தாதுக்கு சென்று அறிவிக்கும் செய்திகள் குளறுபடியானவை என்று இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/504 )

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

  • இந்த செய்தியை ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள் ஹஸன் தரம் என்றும், அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் சரியானது என்றும் கூறியுள்ளனர்.

(நூல்: அஸ்ஸஹீஹா-951)

  • என்றாலும் ஷுஐப் அல்அர்னாவூதும், பஷ்ஷார்அவ்வாதும் தக்ரீபுத் தக்ரீபை பகுப்பாய்வு செய்து வெளியிட்ட நூலான தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீபில் அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத் பற்றி இவர் பலவீனமானவர் என்றே கூறியுள்ளனர். எனவே ஷுஐப் அவர்கள் இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறியிருப்பது தவறாகும்.

(நூல்: தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-3861)

  • மேலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்களும், அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாத் பற்றி சில இடங்களில் இவர் பக்தாதுக்கு சென்ற பின் மூளைகுழம்பிவிட்டார் என்ற இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டியுள்ளார். இந்த செய்தியில் அப்துர்ரஹ்மான் பின் அபுஸ்ஸினாதிடமிருந்து அறிவிப்பவர்கள் பக்தாதைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கவனிக்கத் தவறி இருக்கலாம் என்று தெரிகிறது.

(நூல்: ஸஹீஹ் அபூதாவூத்-151)

மேற்கண்ட செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் ஏற்கத்தக்க ஹதீஸ் வந்துள்ளது. (பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3481)

2 . இந்தக் கருத்தில் மஹ்மூத் பின் லபீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அம்ர் பின் அபூஅம்ர் —> மஹ்மூத் பின் லபீத் (ரலி)

பார்க்க: அஹ்மத்-23630 ,

  • அம்ர் பின் அபூஅம்ர் —> ஆஸிம் பின் உமர் —> மஹ்மூத் பின் லபீத் (ரலி)

பார்க்க: அஹ்மத்-23631 , 23636 ,

மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3481 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.