தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-24422

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஆயிஷா(ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! (பெண்களாகிய) நாங்களும் உங்களுடன் வந்து அறப்போர் புரியலாமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத ஹஜ் தான்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா பின்த் தல்ஹா (ரஹ்)

(முஸ்னது அஹமது: 24422)

حَدَّثَنَا حُسَيْنٌ، حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي ابْنَ عَطَاءٍ، عَنْ حَبِيبٍ يَعْنِي ابْنَ أَبِي عَمْرَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ:

يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَخْرُجُ نُجَاهِدُ مَعَكُمْ، قَالَ: «لَا، جِهَادُكُنَّ الْحَجُّ الْمَبْرُورُ، هُوَ لَكُنَّ جِهَادٌ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-24422.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23865.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஸீத் பின் அதாஉ பற்றி சிலர் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். என்றாலும் இந்தக் கருத்தில் சரியான ஹதீஸ்களும் உள்ளன.

பார்க்க: புகாரி-1520 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.