தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-24529

---


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 24529)

حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ الطُّفَيْلِ بْنِ سَخْبَرَةَ، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مَؤُونَةً»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-23388.
Musnad-Ahmad-Shamila-24529.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-23968.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ இப்னுத் துஃபைல் பின் ஸக்பரா என்பவர் ராவீ-33081-ஈஸா பின் மைமூன் பின் தலிதான் (ஈஸா பின் மைமூன் அல்வாஸிதீ) என்ற பலவீனமானவர் ஆவார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடர் என்று அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    போன்றோர் கூறியுள்ளனர்.

1 . ஆனால் ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் உள்ளனர். இவ்விருவரின் பெயரும் ஈஸா, இவ்விருவரின் தந்தை பெயரும் மைமூன் என்று அமைந்தது போல் இவ்விருவரும் யாரிடம் கேட்டு திருமணம் தொடர்பான ஹதீஸ்களை அறிவிக்கிறார்களோ அவர் பெயர் காஸிம் ஆகும். காஸிம் என்பவரின் தந்தை முஹம்மத் ஆகும்.

ஆனால் இரண்டு காஸிம்களும் வெவ்வேறு நபர்களாவர்.

  • திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் கஅப் என்பவரின் பேரனும் முஹம்மத் என்பவரின் மகனுமாவார்.
  • குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பற்றிய ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் அபூபக்கர் (இஸ்லாத்தின் முதல் கலீஃபா) அவர்களின் பேரனும் முஹம்மத் என்பவரின் மகனுமாவார்.

இவ்விருவர் பெயரும் ஈஸா பின் மைமூன் என்று இருப்பதாலும், இவ்விருவரின் ஆசிரியர்கள் பெயர் காஸிம் பின் முஹம்மத் என்று இருப்பதாலும் சில அறிஞர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு தவறான முடிவுக்கு வந்துள்ளனர்.

இவ்விருவர் பெயரும், இவ்விருவரின் ஆசிரியர் பெயரும், இவ்விருவரின் தந்தை பெயரும் ஒன்று பட்டதால் குழப்பம் ஏற்பட்டாலும் வேறு சான்றுகள் மூலம் இவ்விருவரையும் வேறுபடுத்தி அறிய முடியும்.

1 . குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன், (மூஸா) இப்னு தலீதான் என்றும் குறிப்பிடப்படுவார். இவர் அபூகுஹாபாவின் வழித்தோன்றல் ஆவார். இவர் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கும் போது இப்னு ஸக்பரா என்று இவரைக் கூறுவார். வகீவு, அபூநயீம் ஆகியோர் யார் வழியாக அறிவிக்கிறார்களோ அந்த ஈஸா தான் இவர். இவரிடம் குறைபாடு இல்லை.

2 . திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்’ என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஃபு என்பவர் வழியாக ஹதீஸை அறிவிப்பவருமான மற்றொரு ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத, பலவீனமானவர் ஆவார்.

(நூல்: தாரீகு அஸ்மாயிஸ் ஸிகாத்-1062)

3 . முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர். இவர் வேறொரு ஈஸா ஆவார்” என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார். ஆயிஷா,பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
காஸிம் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாதவர்’ என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக அப்பாஸ் அத்தவ்ரீ கூறிவிட்டு மற்றொரு இடத்தில் “இந்த ஈஸா என்பவர் திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஅப் வழியாக ஹதீஸை அறிவிப்பவருமான ஈஸா தான் இவர். இவர் தான் பலவீனமானவர்; கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாதவர்’ என்று தெளிவுபடுத்துகிறார்.

(நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 23, பக்: 48)

மேற்கண்ட செய்தியின் மூலம் ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் இருந்ததையும் அதில் ஒருவர் தான் பலவீனமானவர் என்பதையும் யஹ்யா பின் மயீன் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

மேலும் பலவீனமானவர் யார் என்பதற்கு மூன்று அடையாளங்களையும் கூறுகிறார்கள்.

1. திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவர்.

2. முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிப்பவர்.

3. குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிப்பவர் அல்ல.

இந்த மூன்று அம்சம் உள்ள ஈஸா தான் பலவீனமானவர்.

மற்றொரு ஈஸா பலவீனமானவர் அல்லர் என்பதையும் யஹ்யா பின் மயீன் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். இதற்கும் மூன்று அடையாளங்களைக் கூறுகிறார்கள்.

1. குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிப்பவர்

2. இவருடைய மாணவர் ஹம்மாத் பின் ஸலமா

3. வகீவு, அபூநயீம் ஆகியோர் இவர் வழியாக அறிவித்திருப்பார்கள்.

  • மேலும் இவர் பெயர் முஸ்னத் அஹ்மதில் இப்னுத் துபைல் பின் ஸக்பரா என்றும்,
  • முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹியில் மூஸா பின் பக்ர் என்றும்,
  • முஸ்னத் தயாலிஸியில் மூஸா பின் தலீதான் என்றும் வருவதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    போன்றோர் இவர்கள் அறியப்படாதவர்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் இம்மூவரும் உண்மையில் மூன்று நபர்கள் அல்லர். நம்பகமானவரான ஈஸா பின் மைமூன் தான்.

கூடுதல் தகவல்: சிக்கனமான திருமணமே பரக்கத்தான திருமணம் .

1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1530 , இப்னு அபீஷைபா-16384 , ராஹவைஹி-946 , அஹ்மத்-24529 , 25119 , நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
குப்ரா-9229 , அல்முஃஜமுல் அவ்ஸத்-9451 , ஹாகிம்-2732 , குப்ரா பைஹகீ-14356 , ஷுஅபுல் ஈமான்-6146 ,

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-4034 .

3 . அலீ பின் யஹ்யா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-10403 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு ஹிப்பான்-4072 .

11 comments on Musnad-Ahmad-24529

  1. எளிமையான திருமணம் பற்றிய ஹதீஸ் ஓர் ஆய்வு

    இஸ்லாம் சிக்கனமாக வாழ்வதையே விரும்புகின்றது என்ற படியால் திருமணங்களை சிக்கனமாகவே அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. ஆயினும் ‘சிக்கனமான திருமணமே அருள்வளம் பொருந்தியது’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சிலர் தவறான ஒரு கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். எனவே இது சம்பந்தமான எனது ஆய்வை இங்கு சமர்ப்பிக்கிறேன். இவ்வாய்வில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அவற்றை முறையாக சுட்டிக்காட்டும் பட்சத்தில் அதை திருத்திக் கொள்ள நான் தயாராகவே உள்ளேன் என்பதையும் இங்கு கூறிக் கொள்கிறேன்.
    சிக்கனமான திருமணம் அருள்வளம் கொண்டது என்று இடம் பெறும் ஹதீஸ்
    حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ الطُّفَيْلِ بْنِ سَخْبَرَةَ، عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” إِنَّ أَعْظَمَ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مَؤُونَةً(احمد-24529)
    சிக்கனமான திருமணமே அதிக அருள்வளம் பொருந்தியதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) நூல்: அஹ்மத் 24529)
    இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானதா?
    மேற்குறித்த ஹதீஸ் பலவீனமாகும். இதன் அறிவிப்பாளர் வரிசை பின்வரும் அடிப்படையில் இடம் பெற்றுள்ளது.
    o நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஆயிஷா(ரழி) அவர்கள்
    o ஆயிஷாவிடமிருந்து காஸிம் பின் முஹம்மத்
    o காஸிமிடமிருந்து ஈஸா பின் மய்மூன்(இப்னு துபைல்)
    o இப்னு துபைலிடமிருந்து ஹம்மாத் பின் ஸலமா
    o ஹம்மாதிடமிருந்து அப்பான்
    அப்பானிடமிருந்து இமாம் அஹ்மத் இச்செய்தியை தனது நூலில் எடுத்தெழுதியுள்ளார்கள். மேலும் இந்த ஹதீஸ் பல கிரந்தங்களிலும் இடம் பெற்றுள்ளது.
    பலவீனம் என்பதற்கு என்ன காரணம்?
    இந்த ஹதீஸ் பலவீனம் என்பதற்கான காரணம் அதில் இடம் பெற்ற ஈஸா பின் மய்மூன் என்ற அறிவிப்பாளரை ஏராளமான அறிஞர்கள் பலவீனமானவர் என ஓரங்கட்டியுள்ளனர் என்பதே ஆகும்.
    வேறு யாரேனும் இந்த ஹதீஸை ஆதாரபூர்வமானது எனக் கூறுகின்றனரா?
    தென்னிந்தியாவைச் சேர்ந்த சகோதரர் பீஜே என்பவர் இந்த ஹதீஸை ஆதாரமானது என்று கூறுகிறார். அது தவறான முடிவு என்பதே எமது நிலைப்பாடாகும்.
    அவரது வாதத்தின் சுருக்கம் என்ன?
    ஈஸா பின் மய்மூன் என்று இருவர் உள்ளனர். இருவரும் காஸிம் பின் முஹம்மத் என்பவரிடமிருந்தே அறிவிக்கின்றனர். காஸிம் பின் முஹம்மத் என்றும் இருவர் உள்ளனர். ஒருவர் முஹம்மத் பின் கஃப் என்பவரின் கொள்ளுப் பேரனாவார். இவரிடமிருந்து அறிவிக்கின்ற ஈஸா பின் மய்மூன் பலவீனமானவர் ஆவார். அதே ஈஸாதான் திருமணத்தை பிரகடனம் செய்யுங்கள் என்ற செய்தியை அறிவிக்கின்றார். மற்றவர் ஆபூபக்கர்(ரழி) அவர்களது அடிமையான காஸிம் என்பவராவார். இவரிடமிருந்து அறிவிக்கின்ற ஈஸா பின் மய்மூன் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளத்தக்க வகையில் உள்ளவர் ஆவார். இவர் எளிய திருமணம் சம்பந்தமான ஹதீஸை அறிவித்தவர் ஆவார்.
    இக்கருத்திற்கு அவர் முன்வைக்கும் ஆதாரம் என்ன?
    பீஜே தனது கூற்றிற்கு யஹ்யா பின் மயீன் என்ற அறிஞர் கூறுவதையே ஆதாரமாகக் காட்டுகின்றார். யஹ்யாவும் இவர் கூறியது போன்றே கூறுகிறார். அவர் இது விடயத்தில் குழம்பிப் போயுள்ளார் என்பதே எமது நிலைப்பாடாகும். (இதனை பின்னால் விளக்கவிருக்கின்றோம்.)
    பீஜே வாதிடுவது போன்று ஈஸா பின் மய்மூன் என்று இருவர் இருந்துள்ளனரா? காஸிம் பின் முஹம்மத் என்று இருவர் இருந்துள்ளனரா? என்பதைப் பற்றி நாம் ஆய்வு செய்வோம்.
    ஈஸா பின் மய்மூன் பற்றிய தரவு
    எளிய திருமணம் சம்பந்தமான ஹதீஸ் ஆதாரபூர்வமானதா? இல்லையா? என்பது ஈஸா பின் மய்மூனைப் பற்றி முழுமையாக அறிவதிலேயே தங்கியுள்ளது என்றபடியால் அதைப் பற்றி நாம் விரிவாகப் பார்வையிடுவோம்.
    ஈஸா பின் மய்மூன் என்பவர் இரண்டு பேரிடம் மாணவராக இருந்துள்ளார். ஒருவர் காஸிம் பின் முஹம்மத் மற்றவர் முஹம்மத் பின் கஃப் அல் குறழீ
    இவர் இரண்டு பேரிடம் மாணவராக இருந்துள்ளார் என்பதை மூல நூலிலிருந்து வழங்குகிறோம்.

    glj;jpy; $wg;gl;lit:
    `jP]; fiy> gpf;{`f; fiy> tuyhW Nghd;w gaDs;s gy E}w;fis cs;slf;fpa xU mugp nkd;nghUshFk;.)
    மக்தபதுஷ் ஷாமிலா என்ற மென்பொருளில் உள்ள விதம்

    மேற்குறித்த இரண்டு படங்களையும் நுணுக்கமாகக் கவனியுங்கள்!
    முதல் படத்தில் இப்படி இடம் பெற்றுள்ளது.
    عيسى بن ميمون عن القاسم بن محمد ومحمد بن كعب القرظي
    அதாவது ஈஸா, காஸிம் என்பவரிடமிருந்தும் முஹம்மத் பின் கஃப் என்பவரிடமிருந்தும் அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது.
    இரண்டாவது படத்தில் இப்படி இடம் பெற்றுள்ளது.
    عيسى بن ميمون عن القاسم بن محمد بن كعب القرظي
    அதாவது ஈஸா, காஸிம் பின் முஹம்மத் பின் கஃப் அல்குறழீ என்பவரிடமிருந்து அறிவிப்பதாக இடம் பெற்றுள்ளது.
    காஸிம் பின் முஹம்மத் பின் கஃப் குறழீ என்று இடம் பெற்றது அச்சில் ஏற்பட்ட தவறே ஆகும். இமாம் உகைலி பின்னால் அதைக் குறிப்பிடுவதிலிருந்தும் இதை உறுதி செய்யலாம்.
    இமாம் உகைலி கூறுகிறார்
    فَأَمَّا حَدِيثُهُ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ
    முஹம்மத் பின் கஃப் வாயிலாக ஈஸா பின் மய்மூன் அறிவிக்கும் செய்தியானது….
    ஈஸா பின் மய்மூன் காஸிம் பின் முஹம்மத் பின் கஃப் என்பவரிடமிருந்து அறிவித்திருந்தால் ‘ஈஸா பின் மய்மூன், முஹம்மத் பின் கஃப் என்பவரிடமிருந்து அறிவிப்பதாக இமாம் உகைலி எப்படிக் கூறுவார்? பீஜேயின் வாதப்படி கூறுவதாக இருந்தால் உகைலி இப்படித்தான் கூறியிருக்க வேண்டும்.
    فَأَمَّا حَدِيثُهُ عَنْ القاسم بن مُحَمَّدِ بْنِ كَعْبٍ
    ஆனால் அவர் அவ்வாறு கூறாமல் முதலாவது முறைப்படியே கூறுகிறார். மூலப்பிரதியிலும் அவ்வாறுதான் இடம் பெற்றுள்ளது.

    சிவப்பு அடையாளமிட்ட இடத்தை உற்றுக் கவனியுங்கள்! அதை தெளிவான அறபு மொழியில் வழங்குகிறேன்.
    عِيسَى بْنُ مَيْمُونٍ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، مُنْكَرُ الْحَدِيثِ فَأَمَّا حَدِيثُهُ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ
    எனவே இதிலிருந்து காஸிம் பின் முஹம்மத் பின் கஃப் என்ற ஒருவர் உலகில் வாழ்ந்தது கிடையாது என்பது பளிச்சென எமக்கு தெரிகின்றது.

  2. https://docs.google.com/document/d/195XgPPbJWQ6XJAMIIpfOsnWQr_u746PxOAzgz9FzlkI/edit?usp=sharing

    அஸ்ஸலாமு அலைக்கும்
    மேலே உள்ள ஆய்வுக்கட்டுரை நான் இந்த ஹதீஸ் சம்பந்தமாக தேடிய போது கிடைத்தது இதில் சில ஆதாரங்களை சுட்டிக்காட்டி இந்த ஹதீஸ் பலகீனம் என்று சொல்கிறார்கள் உங்களது விளகத்தை எதிர்பார்க்கிறேன்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      மேற்கண்ட செய்தியை முழுமையாக ஆய்வு செய்த பின்பே வெளியிடப்பட்டுள்ளது. பலவீனமானது என்று கூறக்கூடியவர்களின் ஆதாரங்களையும் சேர்த்தே கூறப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்கவும். நீங்கள் குறிப்பிடும் கட்டுரையில் மேற்கண்ட விளக்கத்திற்கு மறுப்பு கூறப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

        1. அஸ்ஸலாமு அலைக்கும்.

          நீங்கள் குறிப்பிடும் கட்டுரையை மேற்கண்ட லிங்கிலிருந்து எடுக்கமுடியவில்லை.

        2. அஸ்ஸலாமு அலைக்கும்.
          தங்களின் கட்டுரையில் சில அரபு வாக்கியங்கள் ஆங்கில எழுத்தில் உள்ளது. லின்க் வேலை செய்யவில்லை. சரியாக அனுப்பவும்.

          1. வ அலைக்கும் சலாம், மாற்றிவிட்டேன்… ஜசாகல்லாஹ்…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.