தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-24584

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம், ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோன்பு பற்றி கேட்டார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஷஃபான் மாதம் நோன்பு வைப்பார்கள். மேலும் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு வைப்பார்கள் என பதிலளித்தார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 24584)

حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، قَالَ: حَدَّثَنِي بَحِيرُ بْنُ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ،

أَنَّ رَجُلًا سَأَلَ عَائِشَةَ عَنِ الصِّيَامِ، فَقَالَتْ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ شَعْبَانَ، وَكَانَ يَتَحَرَّى صِيَامَ يَوْمِ الْخَمِيسِ وَالِاثْنَيْنِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-24584.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-24023.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9319-பகிய்யது பின் வலீத் பற்றி தத்லீஸ் செய்பவர் என்றும், பலவீனமானவர்கள், கைவிடப்பட்டவர்களை மறைத்து அறிவிப்பவர் என்றும், தன் ஊர்வாசிகள் அல்லாதவர்களிடமிருந்து அறிவிப்பதில் தவறு உள்ளது என்றும், தவறிழைப்பவர் என்றும் நான்கு வகையான விமர்சனம் உள்ளது. எனவே சில நிபந்தனைகளின் படி இருந்தால் மட்டுமே இவரின் செய்திகள் ஏற்கப்படும் என அப்துல்லாஹ் ஸஃத் என்ற ஹதீஸ்கலை அறிஞர் கூறியுள்ளார்.

1 . இவரின் ஆசிரியர் பலமானவராக இருக்க வேண்டும்.

2 . இவரின் ஆசிரியர் இவர் ஊரைச் சேர்ந்த ஷாம் வாசியாக இருக்க வேண்டும். (உதாரணமாக-பஹீர் பின் ஸஃத், முஹம்மது பின் ஸியாத் போன்றவர்கள்)

3 . தன் ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்திருக்க வேண்டும்.

4 . இவரின் ஆசிரியருக்கும், அவரின் ஆசிரியருக்கும் இடையில் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருக்க வேண்டும்.

(இவர் தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் அல்ல என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை செய்தவர்கள் இவரின் சில மாணவர்கள் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார். (அல்இக்மால்-3/6) எனவே இந்த நிபந்தனை தேவையில்லை)

5 . இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் ஷாம் வாசியாக இருக்க கூடாது. குறிப்பாக ஹிம்ஸ் பகுதியை சேரந்தவராக இருக்கக் கூடாது. அவர் பலமானவராக இருந்தால் போதும். (இந்த நிபந்தனை தேவையில்லை)

மேற்கண்ட ஐந்து நிபந்தனைகளில் ஒன்று குறைந்தாலும் சிலர் பலவீனம் என்றும், சிலர் இவரின் ஆசிரியர், இவரின் ஆசிரியரின் ஆசிரியர்களுக்கிடையில் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருந்தால் போதும் என்றும் கூறியுள்ளனர்.

வேறு சிலர் முதலில் கூறப்பட்ட 3 நிபந்தனை இருந்தால் போதும் என்று கூறியுள்ளனர்.


  • பகிய்யது பின் வலீத், பஹீர் பின் ஸஃத் வழியாக அறிவிக்கும் அறிவிப்பை ஷுஃபா அவர்கள் ஏற்றுள்ளார்.

الكامل في ضعفاء الرجال (2/ 264)
حَدَّثَنَا الفضل بن عَبد اللَّه بْنِ سُلَيْمَانَ، حَدَّثَنا سُلَيْمَانُ بْنُ عَبد الحميد، حَدَّثَنا حيوة، قَالَ: سَمِعْتُ بَقِيَّة يَقُولُ لما قرأت عَلَى شُعْبَة كتاب بحير بْن سعد، قَال: قَال لي يا أبا يحمد لو لم أسمع هَذَا منك لطرت.

பகிய்யா அவர்கள், ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களிடம் பஹீர் பின் ஸஃத் அவர்களின் ஹதீஸ் நூலை வாசித்துக் காட்டியபோது, இதை நான் கேட்டிராவிட்டால் உன்னை விரட்டியிருப்பேன் அபூயஹ்மதே! என்று ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் கூறினார். (இதை பகிய்யாவே அறிவிக்கிறார்)

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2/264)

இதிலிருந்து பகிய்யா அவர்கள், பஹீர் பின் ஸஃதிடமிருந்து அறிவிப்பதை ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் ஏற்றுள்ளார் என்று தெரிகிறது.


இந்தச் செய்தியை வேறுசிலரும் அறிவித்துள்ளனர் என்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.


மேலும் பார்க்க: திர்மிதீ-745 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.