ஸஃது பின் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது” என்று கூறினார்கள்.
மேலும், “நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்” (அல்குர்ஆன் 68: 4) என்ற அல்லாஹ்வின் வசனத்தை குர்ஆனில் ஓதியதில்லையா? என்றும் கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 24601)حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنَا مُبَارَكٌ، عَنْ الْحَسَنِ، عَنْ سَعْدِ بْنِ هِشَامِ بْنِ عَامِرٍ، قَالَ:
أَتَيْتُ عَائِشَةَ، فَقُلْتُ: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، أَخْبِرِينِي بِخُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: ” كَانَ خُلُقُهُ الْقُرْآنَ، أَمَا تَقْرَأُ الْقُرْآنَ، قَوْلَ اللَّهِ عَزَّ وَجَلَّ: {وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ} [القلم: 4]
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-24601.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-24040.
சமீப விமர்சனங்கள்