ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரை, அல்லாஹ் நரகத்திற்கு தடைசெய்துவிடுகிறான்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 26772)حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ مُوسَى، أَخْبَرَنِي مَكْحُولٌ، أَنَّ مَوْلًى لِعَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، حَدَّثَهُ أَنَّ عَنْبَسَةَ بْنَ أَبِي سُفْيَانَ، أَخْبَرَهُ عَنْ أُمِّ حَبِيبَةَ بِنْتِ أَبِي سُفْيَانَ، أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعًا بَعْدَ الظُّهْرِ، حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-26772.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26161.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ பலவீனமானவர்; இவரிடமிருந்து சிலர் அறிவித்தால் மட்டுமே அவை சரியானது என்று இருந்தாலும் இந்த செய்தியில் மக்ஹூல் அவர்களுக்கும், அன்பஸா அவர்களுக்கும் இடையில் கூறப்படும் அன்பஸா அவர்களின் அடிமை யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-26764 .
சமீப விமர்சனங்கள்