தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-26764

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஹஸ்ஸான் பின் அத்திய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அன்பஸா பின் அபூஸுஃப்யான் (ரஹ்) அவர்களுக்கு மரணம் நெருங்கியபோது மிகவும் பதட்டமாக காணப்பட்டார். இந்த பதட்டம் ஏன்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டபோது,

“லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரின் உடலை, அல்லாஹ்  நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக எனது சகோதரி உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றதிலிருந்து அவைகளை நான் விடவில்லை. (தற்போது விடவேண்டியது ஏற்பட்டுள்ளதே என்பதால் பதட்டமாக உள்ளேன்) என்று கூறினார்.

(முஸ்னது அஹ்மத்: 26764)

حَدَّثَنَا رَوْحٌ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، قَالَ :

لَمَّا نَزَلَ بِعَنْبَسَةَ بْنَ أَبِي سُفْيَانَ، الْمَوْتُ اشْتَدَّ جَزَعُهُ، فَقِيلَ لَهُ: مَا هَذَا الْجَزَعُ؟ قَالَ: أَمَا إِنِّي سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ، يَعْنِي أُخْتَهُ، تَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعًا بَعْدَهَا، حَرَّمَ اللَّهُ لَحْمَهُ عَلَى النَّارِ» . فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-26764.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26153.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11514-ஹஸ்ஸான் பின் அதிய்யா பலமானவர் என்றாலும், இவரைப் பற்றிய தகவலைக் கூறிய புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவர் எந்த நபித்தோழரிடமும் ஹதீஸைக் கேட்டதாக குறிப்பிடவில்லை.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவரை தப்உத் தாபிஈன்களில் (தாபிஈன்களுக்கு அடுத்த தலைமுறையில்) சேர்த்துள்ளார்.

(நூல்கள்: தாரீகுல் கபீர்-3011, அஸ்ஸிகாத்-6/223)


المستدرك على جامع التحصيل للعلائي (ص: 63)

حسان بن عطية الدمشقي

((لم يسمع من أبي أمامة)) قاله ابن عساكر في ” الأطراف ” انظر: ” الآداب الشرعية ” لابن مفلح (2/ 91)

எனவே தான் இப்னு அஸாகிர் அவர்கள், இவர் அபூஉமாமா (ரலி­) அவர்களிடம் ஹதீஸை செவியேற்கவில்லை என்று  கூறியுள்ளார்.

(நூல்: அல்முஸ்தத்ரக் அலா ஜாமிஇத் தஹ்ஸீல்-63)

تحفة الأشراف بمعرفة الأطراف (4/ 162)

حسَّان بن عطيَّة أبو بكر الشاميُّ، عن أبي أمامة – ولم يسمع منه

மிஸ்ஸீ இமாம் அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார்.

(நூல்: துஹ்ஃபதுல் அஷ்ராஃப்-4/162)


تحفة التحصيل في ذكر رواة المراسيل (ص: 66)

حسان بن عَطِيَّة الدِّمَشْقِي روى عَن أبي أُمَامَة وَقيل أَنه لم يسمع مِنْهُ

وَسُئِلَ أَحْمد بن حَنْبَل حسان بن عَطِيَّة سمع من عَمْرو بن الْعَاصِ فَقَالَ لَا

قلت وَذكره ابْن حبَان فِي طبقَة أَتبَاع التَّابِعين فَدلَّ على انه لم يَصح عِنْده سَمَاعه من اُحْدُ من الصَّحَابَة

அபூஸுர்ஆ அல்இராகீ அவர்கள், இவர் அபூஉமாமிடமிருந்து ஹதீஸை அறிவித்ததாக வந்துள்ளது. ஆனால் இவர் அபூஉமாமா (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுவிட்டு… இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இவரை தப்உத் தாபிஈன்களில் (தாபிஈன்களுக்கு அடுத்த தலைமுறையில்) சேர்த்துள்ளார். இதன் மூலம் இவர் எந்த நபித்தோழரிடமும் ஹதீஸைக் கேட்கவில்லை; இவர் நபித்தோழரிடமிருந்து அறிவிப்பது இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்களின் பார்வையில் சரியானதல்ல என்று கூறியுள்ளார்.

(நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-66)


  • அபூஉமாமா (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 81 அல்லது 86 அல்லது 90 இல் மரணித்தார் என்றும், ஹஸ்ஸான் பின் அதிய்யா ஹிஜ்ரீ 121 க்கும், 130 க்கும் இடைப்பட்ட காலத்தில் மரணித்தார் என்றும் வரலாற்றில் கூறப்படுகிறது.

(நூல்: தாரீகுல் இஸ்லாம்-2/947, 3/396)

  • அன்பஸா பின் அபூஸுஃப்யான் ஹிஜ்ரீ (41 அல்லது) 50 இல் மரணித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

(நூல்: தாரீகுல் இஸ்லாம்-2/434)


இதனடிப்படையில் அபூஉமாமா (ரலி) அவர்களிடமே ஹஸ்ஸான் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதால் அபூஉமாமா (ரலி) அவர்களுக்கு முன்பே இறந்துவிட்ட அன்பஸா பின் அபூஸுஃப்யான் அவர்களிடமும் ஹஸ்ஸான் ஹதீஸைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.


லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் 4 ரக்அத்கள் சுன்னத் தொழுவதின் சிறப்பு பற்றி அன்பஸா பின் அபூஸுஃப்யான் —> உம்மு ஹபீபா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் 6 வகையான அறிவிப்பாளர்தொடர்களிலும் விமர்சனம் இருப்பதால், அன்பஸா பின் அபூஸுஃப்யான் அவர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் நாள்தோறும் 12 ரக்அத்கள் சுன்னத் தொழுவதின் சிறப்பு பற்றி அறிவிக்கப்படும் சில சரியான அறிவிப்பாளர்தொடர்களே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்திகளாகும்.

இதைப் பற்றிய விவரம்:

1 . அப்துல்லாஹ் பின் முஹாஜிர் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது.

2 . ஹஸ்ஸான் பின் அதிய்யா அவர்கள் அன்பஸா அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை.

3 . மக்ஹூல் அவர்கள் அன்பஸா அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை.

4 . காஸிம் அபூஅப்துர்ரஹ்மான், அன்பஸா அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்தியில் விமர்சனம் உள்ளது.

5 . ஸுலைமான் பின் மூஸா வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர் தவறானது.

6 . இப்ராஹீம் பின் அபூஅப்லா வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர் மிக பலவீனமானது.


இந்தச் செய்தி பலவீனம் என்பதற்கு கூறப்படும் சில காரணங்கள்:

1 . அன்பஸா அவர்கள் மரணத்தருவாயில் அறிவித்ததாக இரண்டு வகையான செய்திகள் தனித்தனியாக வந்துள்ளன. (இரண்டும் சேர்ந்து வரவில்லை)

1. 12 ரக்அத் சுன்னத் தொழுகை பற்றிய செய்தி.

2 . லுஹருக்கு முன்பும், பின்பும் 4 ரக்அத் தொழுவது பற்றிய செய்தி.

அன்பஸா அவர்களிடமிருந்து 12 ரக்அத் ஹதீஸை தான் அதிகமானவர்கள் அறிவித்துள்ளனர். இவர்களில் சிலர் தாயிஃபைச் சேர்ந்தவர்கள்; சிலர் மதீனாவைச் சேர்ந்தவர்கள்; சிலர் கூஃபாவைச் சேர்ந்தவர்கள்; சிலர் மக்காவைச் சேர்ந்தவர்கள்.

ஷாம்வாசிகள் தான், லுஹருக்கு முன்பும், பின்பும் 4 ரக்அத் தொழுகை பற்றிய ஹதீஸை அறிவித்துள்ளனர். இவர்கள் வழியாக வரும் செய்திகளில் விமர்சனம் உள்ளது.

2 . 12 ரக்அத் பற்றி வரும் மற்ற ஹதீஸ்களில் லுஹருக்கு பின் 4 ரக்அத் என்ற கருத்து வரவில்லை. அன்பஸா அவர்கள் 12 ரக்அத் என்று குறிப்பிட்டுள்ள சுன்னத்தான தொழுகைகளில் லுஹருக்கு பின் கூடுதலாக இரண்டு ரக்அத்தை சேர்த்தால் 14 ரக்அத் என்ற எண்ணிக்கை வரும். இது நான், 12 ரக்அத்களை இதுவரை விடவில்லை என்ற கூற்றுக்கு முரணாகிவிடும்.

3 . நபி (ஸல்) அவர்கள் லுஹருக்கு பின் தொழவேண்டிய சுன்னத் தொழுகை தவறியபோது அதை அஸருக்கு பின் தொழும் போது இரண்டு ரக்அத்தாக தான் தொழுதார்கள்.

(பார்க்க: புகாரி-1233)

4 . நபி (ஸல்) அவர்கள், (ஜுமுஆ நாளில் தவிர) மற்ற நாட்களில்  லுஹருக்கு பின் 4 ரக்அத் தொழுததாகவோ அல்லது தொழ ஏவியதாகவோ இந்த செய்தியைத் தவிர வேறு சரியான செய்திகள் வரவில்லை.

5 . மேலும் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் இந்தக் கருத்தில் வரும் செய்திகளைக் குறிப்பிடும் போது 12 ரக்அத் சுன்னத் தொழுகை பற்றி வரும் செய்தியையே முன்னிலைப் படுத்தியுள்ளனர்.

கூடுதல் தகவல் பார்க்க: ஃபள்லுர்ரஹீமுல் வதூத் (தக்ரீஜ் அபூதாவூத்-13/349-361)


1 . இந்தக் கருத்தில் உம்மு ஹபீபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

லுஹருக்கு முன்பும், பின்பும் 4 ரக்அத்கள் தொழுவதின் சிறப்பு:

1 . முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் முஹாஜிர் —>  அன்பஸா பின் அபூஸுஃப்யான் —> உம்மு ஹபீபா (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4828 , அல்முஃஜமுல் கபீர்-444 , முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-1433 ,

  • முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் முஹாஜிர் —> அப்துல்லாஹ் பின் முஹாஜிர் —> அன்பஸா பின் அபூஸுஃப்யான் —> உம்மு ஹபீபா (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5983 , அஹ்மத்-27403 , இப்னு மாஜா-1160 , திர்மிதீ-427 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-1817 , முஸ்னத் அபீ யஃலா-, அல்முஃஜமுல் கபீர்-,

2 . ஹஸ்ஸான் பின் அதிய்யா —> அன்பஸா பின் அபூஸுஃப்யான் —> உம்மு ஹபீபா (ரலி)

பார்க்க: அஹ்மத்-26764 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-1812 , அல்முஃஜமுல் அவ்ஸத்-, குப்ரா பைஹகீ-,

…அப்து பின் ஹுமைத்-1553 ,

3 . மக்ஹூல் —> அன்பஸா அவர்களின் அடிமை —> அன்பஸா பின் அபூஸுஃப்யான் —> உம்மு ஹபீபா (ரலி)

பார்க்க: அஹ்மத்-26772 ,

  • மக்ஹூல் —> அன்பஸா பின் அபூஸுஃப்யான் —> உம்மு ஹபீபா (ரலி)

பார்க்க: அபூதாவூத்-1269 , நஸாயீ-18141815 , இப்னு குஸைமா-1191 , 1192 , ஹாகிம்-1175 ,

4 . காஸிம் அபூஅப்துர்ரஹ்மான் —> அன்பஸா பின் அபூஸுஃப்யான் —> உம்மு ஹபீபா (ரலி)

பார்க்க: தாரீகுல் கபீர்-160, 7/36 , ஹதீஸுஸ் ஸர்ராஜ்-2169 , திர்மிதீ-428 , அல்முஃஜமுல் கபீர்-, முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-, மஃரிஃபதுஸ் ஸஹாபா-இப்னு மன்தஹ்-, ஷரஹுஸ் ஸுன்னா-, தாரீகு திமிஷ்க்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-1813 , அல்முஃஜமுல் கபீர்-,

5 . ஸுலைமான் பின் மூஸா —> *அன்பஸா பின் அபூஸுஃப்யான் —> உம்மு ஹபீபா (ரலி)

அபூஆஸிம், அபூஆமிர் (அப்துல்மலிக் பின் அம்ரின்) அறிவிப்புகள்:

பார்க்க: குப்ரா நஸாயீ-1486 , நஸாயீ-1816 , இப்னு குஸைமா-1190 , அல்முஃஜமுல் கபீர்-456 ,

மர்வான் பின் முஹம்மத், நுஃமான் பின் முன்திரியின் அறிவிப்புகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-452 , இப்னு குஸைமா-1191 , 1192 , ஹாகிம்-1175 ,

6 . இப்ராஹீம் பின் அபூஅப்லா —> அன்பஸா பின் அபூஸுஃப்யான் —> உம்மு ஹபீபா (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-446 , முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-65 ,

இன்ஷா அல்லாஹ் மற்ற கூடுதல் தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.


நாள்தோறும் 12 ரக்அத்கள் சுன்னத் தொழுவதின் சிறப்பு:

பார்க்க: முஸ்லிம்-1319 .

2 comments on Musnad-Ahmad-26764

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இந்தச் செய்தி பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஆய்வில் உள்ளது. இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.