தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1815

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1815.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரை, அல்லாஹ்  நரகத்திற்கு தடைசெய்துவிடுகிறான்.

அறிவிப்பவர்: (ரலி)

உம்மு ஹபீபா (ரலி)

أم حبيبة بنت أبي سفيان

இறப்பு: ஹிஜ்ரி 42 அல்லது 44, மதீனா

தரம்: நபித்தோழர்


விபரங்கள்

இயற்பெயர்: ரம்லா பின்த் அபீ ஸுஃப்யான்

தந்தை பெயர்: அபூ ஸுஃப்யான் பின் ஹர்ப்

வம்சம்: உமைய்யா, அப்து ஷம்ஸ், அப்து மனாஃப், குஸை, கிலாப், முர்ரா

புனைப்பெயர்: உம்மு ஹபீபா, அம்முல் முஃமினீன்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, அபிசீனியா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 34, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 42 அல்லது 44, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

உம்மு ஹபீபா ரலி அவர்கள் ஹபீபா என்ற தனது மகளின் பெயரால் அறியப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் கடுமையான எதிரியான அபூ ஸுஃப்யான் பின் ஹர்ப் அவர்களின் மகளாவார். தனது கணவர் உபைதுல்லாஹ் பின் ஜஹ்ஷ் அவர்களுடன் அபிசீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள்.

உபைதுல்லாஹ் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி அங்கேயே இறந்துவிட்டார். ஆனால் உம்மு ஹபீபா ரலி அவர்கள் இஸ்லாத்தில் உறுதியாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அபிசீனியாவின் மன்னருக்கு தூதரை அனுப்பியபோது, உம்மு ஹபீபா ரலி அவர்களுக்கு திருமணம் செய்ய முன்மொழிந்தார்கள்.

மன்னர் 400 தீனார் மஹருடன் நபி (ஸல்) அவர்களுக்கு உம்மு ஹபீபா ரலி அவர்களை திருமணம் செய்து வைத்து, ஷுரஹ்பீல் பின் ஹஸ்னா அவர்களின் பாதுகாப்பில் நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார். ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹபீபா ரலி அவர்களை திருமணம் செய்தார்கள். ஹிஜ்ரி 42 அல்லது 44 ஆம் ஆண்டு மதீனாவில் மரணமடைந்தார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), ஸைனப் பின்த் ஜஹ்ஷ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஆவியா பின் அபூ ஸுஃப்யான், ஹபீபா பின்த் உபைதுல்லாஹ், ஸைனப் பின்த் அபீ ஸலமா, உர்வா பின் அஸ்ஸுபைர், அன்பஸா பின் அபூ ஸுஃப்யான், அப்துல்லாஹ் பின் உத்ஃபா, அபூ ஸாலிஹ் அஸ்ஸம்மான், ஸாலிம் பின் ஷவ்வால், ஷுதைர் பின் ஷகல், ஷஹ்ர் பின் ஹவ்ஷப், அபூல் மலீஹ் அல்ஹுத்லீ, ஸஃபிய்யா பின்த் அபீ ஷைபா

வேறு பெயர்கள்: ரம்லா பின்த் அபீ ஸுஃப்யான்


ஆதாரம்: muslimscholars.info (59) · Should verify


عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ ـ قَال مَرْوَانُ: وَكَانَ سَعِيدٌ إِذَا قُرِئَ عَلَيْهِ، عَنْ أُمِّ حَبِيبَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقَرَّ بِذَلِكَ وَلَمْ يُنْكِرْهُ، وَإِذَا حَدَّثَنَا بِهِ هُوَ لَمْ يَرْفَعْهُ ـ قَالَتْ:

«مَنْ رَكَعَ أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعًا بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»

قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «مَكْحُولٌ لَمْ يَسْمَعْ مِنْ عَنْبَسَةَ شَيْئًا»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1815.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1802.



மேலும் பார்க்க : அஹ்மத்-26764 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.