என்னை நம்பிக்கை கொள்ளாதவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவர் என்னை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அஸ்மா பின்த் ஸயீத் பின் ஸைத் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 27146)حَدَّثَنَا يُونُسُ، حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، عَنْ أَبِي ثِفَالٍ الْمُرِّيِّ، عَنْ رَبَاحِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُوَيْطِبٍ، عَنْ جَدَّتِهِ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«لَمْ يُؤْمِنْ بِاللَّهِ مَنْ لَمْ يُؤْمِنْ بِي، وَلَمْ يُؤْمِنْ بِي مَنْ لَا يُحِبُّ الْأَنْصَارَ، وَلَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرْ اسْمَ اللَّهِ عَلَيْهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-27146.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-26513.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூஸிஃபால்-ஸுமாமா பின் வாயில் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-16651 .
சமீப விமர்சனங்கள்