பத்ருப் போர் அன்று ஒரு ஒட்டகத்திற்கு மூவர் என்ற அடிப்படையில் பயணம் செய்தோம். நபிகள் நாயகத்துடன் அபூ லுபாபா, அலி பின் அபீதாலிப் ஆகிய இருவரும் ஒட்டகத் தோழராக இருந்தனர். நபிகள் நாயகத்தின் முறை வந்த போது ‘உங்களுக்காக நாங்கள் நடக்கிறோம்’ என இருவரும் கூறினார்கள். ‘நீங்கள் என்னை விட வலிமையானவரும் அல்லர். நான் உங்களை விட (இறைவனின்) கூலியில் தேவையற்றவனும் அல்லன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 3901)حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنَا عَاصِمٌ ابْنُ بَهْدَلَةَ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ:
كُنَّا يَوْمَ بَدْرٍ كُلُّ ثَلَاثَةٍ عَلَى بَعِيرٍ، كَانَ أَبُو لُبَابَةَ، وَعَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ، زَمِيلَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَكَانَتْ عُقْبَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَقَالَا نَحْنُ نَمْشِي عَنْكَ، فَقَالَ: «مَا أَنْتُمَا بِأَقْوَى مِنِّي، وَلَا أَنَا بِأَغْنَى عَنِ الْأَجْرِ مِنْكُمَا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-3706.
Musnad-Ahmad-Shamila-3901.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-3770.
إسناده حسن رجاله ثقات عدا عاصم بن أبي النجود الأسدي وهو صدوق حسن الحديث ،
رجاله رجال البخاري عدا عاصم بن أبي النجود الأسدي روى له البخاري مقرونًا بغيره وحماد بن سلمة البصري روى له البخاري تعليقًا
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20386-ஆஸிம் பின் பஹ்தலா- ஆஸிம் பின் அபுன் நஜூத் நம்பகமானவர் என்றாலும் சிறிது நினைவாற்றலில் குறையுள்ளவர் ஆவார். எனவே இவர் தரத்தில், சுமாரானவர் என்பதால் இது ஹஸன் தரத்தில் அமைந்த செய்தி என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
கூறுகிறார்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-352 , முஸ்னத் அஹ்மத்-3901 , 3965 , 4009 , 4010 , 4029 , முஸ்னத் பஸ்ஸார்-1813 , நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
குப்ரா-8756 , முஸ்னத் அபீயஃலா-5359 , இப்னு ஹிப்பான்-4733 , ஹாகிம்-2453 , 4299 , அல்ஆதாப்-649 , ஸுனன் குப்ரா பைஹகீ-10357 , பைஹகீ-தலாஇலுன் நுபுவ்வஹ்-913 ,
சமீப விமர்சனங்கள்