ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் பெயர்களில் அழகான பெயர் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 4774)حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الْعُمَرِيُّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ مِنْ أَحْسَنِ أَسْمَائِكُمْ عَبْدَ اللَّهِ، وَعَبْدَ الرَّحْمَنِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-4774.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-4634.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25179-அப்துல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ்-அல்உமரிய்யு என்பவரை மனனத்தில் குறையுள்ளவர் என்பதால் தான் சில அறிஞர்கள் பலவீனமானவர் என கூறுகின்றனர். அவரின் நம்பகத்தன்மையில் அல்ல என இப்னுல் கத்தான் கூறுகிறார்.
- யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்கள், இவர் பலவீனமானவர் என கூறியதாக புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியுள்ளார். - அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்கள், இவர் நல்லமனிதர் என்றாலும் அறிவிப்பாளர்தொடரில் கூடுதல் செய்துள்ளார் என்று விமர்சித்துள்ளார்.
(நூல்: இக்மாலு தஹ்தீபில் கமால் 8/75)
இவரைப் போன்று மற்றவர்களும் அறிவித்துள்ளனர் என்பதால் இதை அவர் சரியாக மனனமிட்டுள்ளார் என்று தெரிகிறது.
சரியான ஹதீஸ் பார்க்க: முஸ்லிம்-4320 .
சமீப விமர்சனங்கள்