தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-4785

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4785. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலை, மாலை வேளைகளில் இந்த துஆக்களை ஓதுவதை விடுவதே இல்லை:

“அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஆஃபியத ஃபித்துன்யா வல்ஆகிரஹ். அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் அஃப்வ வல்ஆஃபியத ஃபீ தீனீ, வ துன்யாய, வ அஹ்லீ, வ மாலீ. அல்லாஹும்மஸ்துர் அவ்ராதீ, வ ஆமின் ரவ்ஆதீ, அல்லாஹும்மஹ்ஃபள்னீ மிம் பைனி யதைய்ய, வ மின் கல்ஃபீ, வ அன் யமீனீ, வ அன் ஷிமாலீ, வ மின் ஃபவ்கீ. வ அஊது பிஅளமதிக அன் உஃக்தால மின் தஹ்தீ.

(பொருள்: “அல்லாஹ்வே! இம்மையிலும் மறுமையிலும் உன்னிடம் நான் மன்னிப்பையும் நல்வாழ்வையும் கேட்கிறேன். அல்லாஹ்வே! எனது மார்க்கத்திலும், எனது உலக வாழ்விலும், எனது குடும்பத்திலும், எனது செல்வத்திலும் உன்னிடம் மன்னிப்பையும் நல்வாழ்வையும் கேட்கிறேன். அல்லாஹ்வே! எனது குறைகளை மறைப்பாயாக! எனது அச்சங்களைப் போக்கி எனக்கு அமைதி அளிப்பாயாக! அல்லாஹ்வே! எனக்கு முன்னாலிருந்தும், எனக்குப் பின்னாலிருந்தும், எனது வலப்புறத்திலிருந்தும், எனது இடப்புறத்திலிருந்தும், எனக்கு மேலிருந்தும் என்னை நீ பாதுகாப்பாயாக! நான் எனக்குக் கீழிருந்து வஞ்சிக்கப்படுவதை விட்டும் உனது மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்)

அறிவிப்பவர்: (ரலி)


இதன் அறிவிப்பாளர் (வகீஃ அவர்கள்) கூறுகையில்: “எனக்குக் கீழிருந்து வஞ்சிக்கப்படுவது என்பது பூமி பிளந்து உள்வாங்குவதைக் குறிக்கும்” என்று விளக்கமளித்துள்ளார்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

عبد الله بن عمر بن الخطاب العدوي

இறப்பு: ஹிஜ்ரி 74, மக்கா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப்

தந்தை பெயர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)

வம்சம்: குறைஷி, பனூ அதீ

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 10, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 74, மக்கா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இப்னு உமர் (ரலி) இரண்டாவது கலீஃபா உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் மகனும், நபித்தோழரும் ஆவார். சிறு வயதிலேயே தம் தந்தையுடன் இஸ்லாத்தை ஏற்று, அவருடன் ஹிஜ்ரத் செய்தார். சிறுவராக இருந்ததால் உஹுத் போரில் அனுமதிக்கப்படவில்லை; கந்தக் போரிலும் அதற்குப் பின் நடந்த போர்களிலும் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டார்.

ஹதீஸிலும் மார்க்கச் சட்டத்திலும் முன்னணி அறிஞராக இருந்தார்; இறையச்சம், நேர்மை, நபிவழிச் செய்திகளில் ஆழ்ந்த அறிவு ஆகியவற்றுக்குப் பெயர் பெற்றவர். உம்முல் முஃமினீன் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் சகோதரர் ஆவார். ஹிஜ்ரி 74 ஆம் ஆண்டு மக்காவில் மரணித்தார் என்று பலர் கூறியுள்ளனர்; ஹிஜ்ரி 73 என்றும் கூறப்பட்டுள்ளது.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), உமர் பின் அல்கத்தாப் (ரலி), ஸைத் பின் அல்கத்தாப் (ரலி), ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி), அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபூதாலிப் (ரலி), பிலால் பின் ரபாஹ் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸுஹைப் பின் ஸினான் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ஆஇஷா பின்த் அபூபக்ர் (ரலி)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரஹ்), நாஃபிஉ (ரஹ்), ஸயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்), காஸிம் பின் முஹம்மத் (ரஹ்), வாகித் பின் அப்துல்லாஹ் (ரஹ்), அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் (ரஹ்), ஹம்ஸா பின் அப்துல்லாஹ் (ரஹ்), ஸைத் பின் அப்துல்லாஹ் (ரஹ்), பிலால் பின் அப்துல்லாஹ் (ரஹ்)

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் உமர், இப்னு உமர் (ரலி), அபூ அப்துர்ரஹ்மான்


ஆதாரம்: muslimscholars.info (18) · Should verify


حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عُبَادَةُ بْنُ مُسْلِمٍ الْفَزَارِيُّ، حَدَّثَنِي جُبَيْرُ بْنُ أَبِي سُلَيْمَانَ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ

لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَعُ هَؤُلَاءِ الدَّعَوَاتِ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي» ، قَالَ: يَعْنِي الْخَسْفَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-4554.
Musnad-Ahmad-Shamila-4785.
Musnad-Ahmad-Alamiah-4554.
Musnad-Ahmad-JawamiulKalim-4644.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: அபூதாவூத்-5074.

4 comments on Musnad-Ahmad-4785

  1. #அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்மத்துல்லாஹி_வபரகாத்தஹு

    ஜீ முழுமையான தமிழாக்கம்

    1. வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

      தமிழாக்கம் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.