தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6575

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (தொழுகையில் ஓதுவதற்கு ஏதேனும் சூராவை) கற்றுத் தாருங்கள்’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அலிஃப் லாம் ரா எனத்தொடங்கும் சூராக்களில் மூன்றை ஓதுவீராக’ என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘நான் வயது முதிர்ந்தவனாக ஆகி விட்டேன். எனது உள்ளம் (அதை மனனம் செய்ய இயலாதவாறு) கடினமாகிவிட்டது. எனது நாவும் (ஓதுவதற்கு) கடினமாகி விட்டது’ என்று கூறினார்.

அதற்கு நபியவர்கள் ‘ஹாமீம் என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓது!’ என்று கூறினார்கள். அதற்கு அவர் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘சப்பஹ அல்லது யுசப்பிஹு என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓதுவீராக!’ என்று கூறிய போதும் அவர் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார்.

பிறகு அவர், ‘அல்லாஹ்வின் தூதரே! (அனைத்து விஷயங்களையும்) உள்ளடக்கிய ஒரு சூராவை எனக்கு கற்றுத் தாருங்கள் என்று கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள், ‘இதா ஸுல்லித்தில் அர்லு ஸில்ஸாஹா’ என்ற சூராவை முழுமையாக ஓதிக் காண்பித்தார்கள். அம்மனிதர், ‘உண்மையுடன் உங்களை அனுப்பியவனின் மீது சத்தியமாக இதற்கு மேல் ஒரு போதும் நான் அதிகமாக்க மாட்டேன்’ என்று கூறி விட்டு திரும்பிச் சென்று விட்டார். அதற்கு நபியவர்கள், ‘ருவைஜில் வெற்றி பெற்று விட்டார்’ என்று இரு முறை கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 6575)

حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا سَعِيدٌ، حَدَّثَنِي عَيَّاشُ بْنُ عَبَّاسٍ، عَنْ عِيسَى بْنِ هِلَالٍ الصَّدَفِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ:

أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” أَقْرِئْنِي يَا رَسُولَ اللَّهِ، قَالَ لَهُ: «اقْرَأْ ثَلَاثًا مِنْ ذَاتِ الر» ، فَقَالَ الرَّجُلُ: كَبِرَتْ سِنِّي، وَاشْتَدَّ قَلْبِي، وَغَلُظَ لِسَانِي، قَالَ: «فَاقْرَأْ مِنْ ذَاتِ حم» فَقَالَ: مِثْلَ مَقَالَتِهِ الْأُولَى، فَقَالَ: «اقْرَأْ ثَلَاثًا مِنَ الْمُسَبِّحَاتِ» ، فَقَالَ: مِثْلَ مَقَالَتِهِ، فَقَالَ الرَّجُلُ: وَلَكِنْ أَقْرِئْنِي يَا رَسُولَ اللَّهِ سُورَةً جَامِعَةً فَأَقْرَأَهُ: إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ حَتَّى إِذَا فَرَغَ مِنْهَا قَالَ الرَّجُلُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، لَا أَزِيدُ عَلَيْهَا أَبَدًا، ثُمَّ أَدْبَرَ الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ الرُّوَيْجِلُ، أَفْلَحَ الرُّوَيْجِلُ» ، ثُمَّ قَالَ: عَلَيَّ بِهِ، فَجَاءَهُ، فَقَالَ لَهُ: «أُمِرْتُ بِيَوْمِ الْأَضْحَى، جَعَلَهُ اللَّهُ عِيدًا لِهَذِهِ الْأُمَّةِ» ، فَقَالَ الرَّجُلُ: أَرَأَيْتَ إِنْ لَمْ أَجِدْ إِلَّا مَنِيحَةَ ابْنِي، أَفَأُضَحِّي بِهَا؟ قَالَ: «لَا، وَلَكِنْ تَأْخُذُ مِنْ شَعْرِكَ، وَتُقَلِّمُ أَظْفَارَكَ، وَتَقُصُّ شَارِبَكَ، وَتَحْلِقُ عَانَتَكَ، فَذَلِكَ تَمَامُ أُضْحِيَّتِكَ عِنْدَ اللَّهِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-6287.
Musnad-Ahmad-Shamila-6575.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6396.




மேலும் பார்க்க: அபூதாவூத்-1399 .

5 comments on Musnad-Ahmad-6575

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    அலிஃப் லாம் ரா இது போன்ற தனி எழுத்துக்களுக்கு அறிஞர்கள் விளக்கம் இல்லாமல் குர்ஆன் மற்றும் ஹதீஸில் ஏதேனும் விளக்கம் வந்துள்ளதா சகோதரரே?

    1. வ அலைக்கும் ஸலாம்.

      அறிஞர்கள் என்றால் யாரைக் கூறுகிறீர்கள்? பொதுவாக குர்ஆன் விரிவுரை நூல்களிலும், ஹதீஸ்நூல்களிலும் நபித்தோழர்கள், தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்கள் போன்ற பலரின் விளக்கங்கள் கலந்தே உள்ளது. அஹ்மத் இமாம் போன்றோர் ஹதீஸ்நூல்களில் எந்த விளக்கமும் சேர்க்கக்கூடாது என்ற கருத்துடையோர் என்பதால் தேவைப்படும் சில இடங்களைத் தவிர பெரும்பாலும் விளக்கங்கள் இருக்காது.

      1. நான் இப்னு கசீர் தமிழாக்கத்தில் பார்த்தேன் அதில் கீழ்கண்டவாறு இருந்தது.அதில் அல்லாஹ்வோ அவனது தூதரோ இதற்கு விளக்கம் சொன்னதாக இல்லை.அதனால் தான் இது சம்பந்தமாக ஹதீஸ் ஏதும் வந்துள்ளதா? எனக்கேட்டேன் சகோ?

        அத்தியாயங்களின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள இத்தகைய தனித்தனி எழுத்துகள் குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பேசுகிற அதே மொழி. அதே எழுத்து கள்தான் இவை என்றாலும், (அவற்றின் பொருளை அறிய முடியாத காரணத் தால்) குர்ஆனோடு போட்டியிடும் சக்தி மக்களுக்குக் கிடையாது என்பதைத் தெளிவுபடுத்துவது இதன் நோக்கமா கும் என்று மற்றச் சிலர் கூறுகிறார்கள்.

        இக்கருத்தை முபர்ரத் (ரஹ்) அவர்கள் உள்ளிட்ட வல்லுநர்கள் தெரிவித்திருப்பதாக ராஸீ (ரஹ்) அவர் களும், ஃபர்ராஉ (ரஹ்) அவர்கள் தெரி வித்ததாக குர்துபீ (ரஹ்) அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். ஸமக்ஷரீ (ரஹ்) அவர்களும் இக்கருத்தை பலமாக ஆதரித்துள்ளார்கள். இமாம் இப்னு தைமிய்யா மற்றும் அபுல்ஹஜ்ஜாஜ் அல்முஸ்ஸீ (ரஹ்) போன்றோரின் கருத்தும் இதுதான்.

        1. அஸ்ஸலாமு அலைக்கும்
          இப்னு கஸிர் தமிழ் PDF இருந்தால் பதிவேற்றம் செய்யுங்கள்.

          1. வ அலைக்கும் ஸலாம். நமது இந்தத் தளம் தற்போது ஹதீஸ் ஆய்வுக்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.