தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6648

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நேர்வழியில் நடக்கும் ஒரு முஸ்லிம், தன் நற்பண்புகளாலும் நன்னடைத்தையாலும், (அவ்வாறில்லாத) அதிகம் நோன்பு வைத்து, அதிகம் இரவில் நின்று அல்லாஹ்வின் வசனங்களை ஓதித்தொழும் தொழுகையாளியின் அந்தஸ்தை எட்டி விடுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 6648)

حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ يَزِيدَ عَنْ عَلِيِّ بْنِ رَبَاحٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«إِنَّ الْمُسْلِمَ الْمُسَدِّدَ لَيُدْرِكُ دَرَجَةَ الصَّوَّامِ الْقَوَّامِ بِآيَاتِ اللَّهِ، بِحُسْنِ خُلُقِهِ، وَكَرَمِ ضَرِيبَتِهِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6648.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6471.




இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-இப்னு லஹீஆ மூளை குழம்பியதால் பலவீனமானவர், நினைவாற்றல் குறைந்தவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். இவரிடமிருந்து ஹஸன் பின் மூஸா அறிவித்திருப்பது இப்னு லஹீஆ மூளை குழம்பியதற்கு பின் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடர்.

மேலும் பார்க்க: அஹ்மத்-7052 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.