7052. நேர்வழியில் நடக்கும் ஒரு முஸ்லிம், தன் நன்னடைத்தையாலும் நற்பண்புகளாலும், (அவ்வாறில்லாத) அதிகம் நோன்பு வைத்து, இரவில் நின்று அல்லாஹ்வின் வசனங்களை ஓதித்தொழும் தொழுகையாளியின் அந்தஸ்தை எட்டி விடுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
حَدَّثَنَا عَلِيُّ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا ابْنُ لَهِيعَةَ، أَخْبَرَنِي الْحَارِثُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ حُجَيْرَةَ الْأَكْبَرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«إِنَّ الْمُسْلِمَ الْمُسَدِّدَ لَيُدْرِكُ دَرَجَةَ الصَّوَّامِ الْقَوَّامِ بِآيَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ، لِكَرَمِ ضَرِيبَتِهِ، وَحُسْنِ خُلُقِهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-7052.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6875.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
(இந்த செய்தியை மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் முபாரக் அறிவித்துள்ளார். இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் வஹ்ப் அவர்களும் அறிவித்துள்ளார். இதை தனது அல்ஜாமிஉ ஃபில் ஹதீஸ் என்ற நூலில் இப்னு வஹ்ப் அவர்கள் (ஹதீஸ் எண்-482 (474) இல்) பதிவு செய்துள்ளார். இப்னு அப்துல்பர் அவர்களும் தனது தம்ஹீத் என்ற நூலில் அப்துல்லாஹ் பின் வஹ்ப் அவர்கள் அறிவித்துள்ள செய்தியை பதிவு செய்துள்ளார்.
(நூல்: அத்தம்ஹீத், பாகம்: 24, பக்கம்: 84)
இப்னு லஹீஆ அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் முபாரக், அப்துல்லாஹ் பின் வஹ்ப் ஆகியோர் அறிவிப்பவை சரியானது என்பதால் இது சரியான செய்தியாகும். அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களும் இந்த செய்தி பற்றி விளக்கி சரியானது என்று கூறியுள்ளார். நூல்: அஸ்ஸஹீஹா-522)
…
1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஹாரிஸ் பின் யஸீத் —> இப்னு ஹுஜைரா —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-6649, 7052, அல்முஃஜமுல் கபீர்-142,
- ஹாரிஸ் பின் யஸீத் —> அலீ பின் ரபாஹ் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-6648 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3126 ,
2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-284 .
3 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4798.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4799,
ஆய்வுக்காக:
https://onlinepj.co.in/videos/?id=1124916872.
பயான் ஆப்: மோசமான வார்த்தைகளை கூறுதல்.
சமீப விமர்சனங்கள்