அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கு சொந்தமான வஹ்த் என்ற நிலத்தை எடுத்துக்கொள்ள முஆவியா (ரலி) அவர்கள் விரும்பினார். உடனே அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், தனது அடிமைகளுக்கு (சண்டைக்கு வர) ஆணையிட்டு ஆயுதம் தரித்தவர்களாக சண்டையிட தயாரானார்கள். நான் இதைக் கேள்விபட்டு அவர்களிடம் சென்று, “என்ன இது? என்று கேட்டேன். அதற்கு, ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் ஒரு அநியாயமிழைக்கப்பட்டு அதற்காக அவர் போராடி அதில் கொல்லப்பட்டால் அவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்.
அறிவிப்பவர்: மக்ஸூம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் தந்தைவழி சகோதரர்.
(முஸ்னது அஹ்மத்: 6913)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، أَنَّهُ سَمِعَ رَجُلًا، مِنْ بَنِي مَخْزُومٍ يُحَدِّثُ، عَنْ عَمِّهِ،
أَنَّ مُعَاوِيَةَ أَرَادَ أَنْ يَأْخُذَ أَرْضًا لِعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو يُقَالُ لَهَا: الْوَهْطُ، فَأَمَرَ مَوَالِيَهُ، فَلَبِسُوا آلَتَهُمْ، وَأَرَادُوا الْقِتَالَ، قَالَ: فَأَتَيْتُهُ، فَقُلْتُ: مَاذَا؟ فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ مُسْلِمٍ يُظْلَمُ بِمَظْلَمَةٍ فَيُقَاتِلَ فَيُقْتَلَ إِلَّا قُتِلَ شَهِيدًا»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6913.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6738.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மக்ஸூம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், அவரின் தந்தைவழி சகோதரரும் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: புகாரி-2480 .
சமீப விமர்சனங்கள்