நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகவும் அருவருப்பான பெயர், (உலகில்) ஒருவர் தமக்கு ‘மன்னாதி மன்னன்’ (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக் கொண்டதாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அப்துல்லாஹ் பின் அஹ்மத் கூறுகிறார்:
எனது தந்தை அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள், நான் (மொழியியல் வல்லுநர்) அபூஅம்ர் இஸ்ஹாக் பின் மிரார் (ரஹ்) அவர்களிடம் (“மிகவும் கேவலமான” என்பதைக் குறிக்க இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அக்னஉ” எனும் சொல் குறித்துக்கேட்டேன். அதற்கு அபூஅம்ர் (ரஹ்) அவர்கள், இதற்கு “அவ்ளஉ” (மிகவும் கீழ்த்தரமானது) என்று பொருள் என விடையளித்தார்” எனக் கூறினார்.
(முஸ்னது அஹ்மத்: 7329)حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَخْنَعُ اسْمٍ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ، رَجُلٌ تَسَمَّى بِمَلِكِ الْأَمْلَاكِ»
قَالَ عَبْدُ اللَّهِ: قَالَ أَبِي: ” سَأَلْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ عَنْ أَخْنَعِ اسْمٍ عِنْدَ اللَّهِ، فَقَالَ: أَوْضَعُ اسْمٍ عِنْدَ اللَّهِ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-7329.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7156.
சமீப விமர்சனங்கள்