தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-7358

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

எனது அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே! என்று (மக்களுக்குத் தெரியும் வகையில் அல்லாஹ்விடம்) நபி (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.

மேலும், “தங்களுடைய நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக்கொண்ட கூட்டத்தினரை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!” என்றும் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 7358)

حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَمْزَةَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

اللهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثَنًا، لَعَنَ اللهُ قَوْمًا اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-7054.
Musnad-Ahmad-Shamila-7358.
Musnad-Ahmad-Alamiah-7054.
Musnad-Ahmad-JawamiulKalim-7184.




அறிவிப்பாளர்கள் பற்றிய தகவல்:

  • 1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14090-ஹம்ஸா பின் முஃகீரா அவர்கள் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், லைஸ பிஹீ பஃஸ்-இவரிடம் குறையில்லை என்று கூறியுள்ளார். (இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் பலமானவர்களுக்கும் இப்படி கூறுவார் என்பதால் இவர் பலமானவர் ஆவார்).
  • இவர் வாலிப வயதிலேயே இறந்துவிட்டார் என்பதால்தான் இவரிடமிருந்து 6ஹதீஸ்நூலாசிரியர்கள் ஹதீஸ்களை அறிவிக்கவில்லை என்ற தகவலை தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/214, தஹ்தீபுல் கமால்-7/340, தாரீகுல் இஸ்லாம்-4/347, தஹ்தீபுத் தஹ்தீப்-1/491, தக்ரீபுத் தஹ்தீப்-1/272)


  • 2 . மேலும் இதில் வரும் ராவீ-18816-ஸுஹைல் பின் அபூஸாலிஹ் அவர்கள் பற்றி சிலர் பலவீனமானவர் என்று விமர்சித்திருந்தாலும் இவருக்கு கடைசிகாலத்தில் நோயின் காரணமாக நினைவாற்றலில் கோளாறு ஏற்பட்டது என்பதால் (அல்லது சிலரின் கருத்துப்படி இவரின் சகோதரர் திடீரென இறந்துவிட்டதால் அதனால் பாதிப்புக்குள்ளாகி நினைவாற்றலில் கோளாறு ஏற்பட்டது என்பதால்) அப்போது அவர் அறிவிக்கும் செய்திகளில் தவறு ஏற்பட்டது என்பதால் ஆகும்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், இவரைவிட முஹம்மத் பின் அம்ர் அவர்கள் நமக்கு பிரியமானவர் என்று யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் கூறினார். ஆனால் முஹம்மத் பின் அம்ர் அவர்களை விட ஸுஹைலே நம் அறிஞர்களிடம் பலமானவர் என்று கூறியுள்ளார்.
  • இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    இமாம் அவர்கள், இவர் பலமானவர் என்றும், இவரிடமிருந்து அறிவித்தவர்களின் தவறினால் தான் இவரின் சில செய்திகளில் தவறு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவரின் ஒரு செய்தியை துணை ஆதாரமாகக் கூறியுள்ளார்.
  • முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாம் அவர்கள் இவரை தனி ஆதாரமாக ஏற்று இவர் அறிவிக்கும் பல செய்திகளை தனது ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்துள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/246, தஹ்தீபுல் கமால்-12/223, தஹ்தீபுத் தஹ்தீப்-2/128, தக்ரீபுத் தஹ்தீப்-1/421, லிஸானுல் மீஸான்-9/320)


இதில் வரும் மற்ற அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.


ஹதீஸின் கருத்து பற்றிய தகவல்:

  • இந்தச் செய்தியை ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலர், முதல் பகுதியை நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையாக அறிவித்துள்ளனர். இவர்கள் ஸுஃப்யான் அவர்களிடமிருந்து ஆரம்பத்தில் கேட்டவர்கள்.
  • ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    அவர்களிடமிருந்து அறிவிக்கும் சிலர் நபி (ஸல்) அவர்களின் கட்டளையாக அறிவித்துள்ளனர். இவர்கள் ஸுஃப்யான் அவர்களிடமிருந்து பிற்காலத்தில் கேட்டவர்கள்.

ஸுஃப்யான் அவர்களுக்கு இறுதிக்காலத்தில் சிறிது மறதி ஏற்பட்டது என்று சிலர் கூறியுள்ளனர். இவர் ஹிஜ்ரீ 197 இல் மூளைக் குழம்பிவிட்டார்; எனவே இந்த நேரத்தில் இவரிடமிருந்து கேட்டவர்களின் செய்தி ஒரு பொருட்டே அல்ல என்று யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்கள் கூறியுள்ளார். இவரின் இறப்பு ஹிஜ்ரீ 198 ஆகும்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-11/177, தக்ரீபுத் தஹ்தீப்-1/395).

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்ததால் இதில் நமக்கு கட்டளையும் உள்ளது.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    —> ஹம்ஸா பின் முஃகீரா —> ஸுஹைல் பின் அபூஸாலிஹ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-1055 , தபகாதுல் குப்ரா-, ஃபளாஇலுல் மதீனா-அல்ஜனதீ-, அஹ்மத்-7358 , முஸ்னத் பஸ்ஸார்-9087 , முஸ்னத் அபீ யஃலா-6681 ,


  • முஸ்னத் ஹுமைதீ-1055.

مسند الحميدي (2/ 224)
1055 – حَدَّثَنَا الْحُمَيْدِيُّ قَالَ: ثنا سُفْيَانُ، قَالَ: ثنا حَمْزَةُ بْنُ مُغِيرَةَ الْكُوفِيُّ، وَكَانَ مِنْ سُرَاةِ الْمَوَالِي، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثنا، لَعَنَ اللَّهُ قَوْمًا اتَّخَذُوا، أَوْ جَعَلُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ»


2 . அதாஉ பின் யஸார் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-475 .

3 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அத்தம்ஹீத்-இப்னு அப்தில்பர்-, கஷ்ஃபுஸ் அஸ்தார்-,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.