தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-7501

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்குவிட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான்.

ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 7501)

حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا مُحَمَّدٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا هَلَكَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا نَهَيْتُكُمْ عَنِ الشَّيْءِ فَاجْتَنِبُوهُ، وَإِذَا أَمَرْتُكُمْ بِالشَّيْءِ، فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-7501.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7318.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-36907-முஹம்மது பின் இஸ்ஹாக் பின் யஸார் அவர்கள் பற்றி சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் குறை கூறியுள்ளனர்.

பாராட்டியவர்கள் பற்றிய விவரம்:

1 . ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஆகியோர் இவர் அமீருல் முஃமினீன ஃபில்ஹதீஸ்-ஹதீஸ்கலையில் முஃமின்களின் தலைவர் என்று கூறியுள்ளனர்.

2 . அபூமுஆவியா அள்ளரீர் பிறப்பு ஹிஜ்ரி 113
இறப்பு ஹிஜ்ரி 194
வயது: 81
அவர்கள், இவர் மக்களில் நல்ல நினைவாற்றல் உள்ளவராக இருந்தார் என்று கூறியுள்ளார்.

3 . ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்கள், இவரின் சபையில்  70 வருடத்திற்குமேல் அமர்ந்து ஹதீஸ்களை கேட்டுள்ளேன். மதீனாவாசிகள் யாரும் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கவில்லை. இவரைப் பற்றி விமர்சிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

4 . இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
இறப்பு ஹிஜ்ரி 199
வயது: 84
அவர்கள், இவர் அறியப்பட்டவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் ஹஸன் தர செய்திகளாகும். அறியப்படாதவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவைகளாகும். இவர் அறியப்படாதவர்களிடமிருந்து தவறான செய்திகளை அறிவித்திருப்பதே இவர் பற்றிய விமர்சனம் ஆகும் என்று கூறியுள்ளார்.

5 . இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், இவரின் சில ஹதீஸ்களை சரியானவை என்றும், சிலவை ஹஸன் தர செய்திகள் என்றும் கூறியுள்ளார்…

6 . இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அவர்கள், இவர் பலமானவர் என்று கூறியுள்ளார்.

7 . இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அபூஸுர்ஆ, கதீப் பக்தாதீ, தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர்  ஆகியோர் இவர் ஸதூக்-நம்பகமானவர் என்ற தரத்தில் அதாவது நடுத்தரமானவர்,நடுத்தரமானவர் - حسن الحديث சுமாரானவர் என்றக் கருத்தில் கூறியுள்ளனர்.

இவரைப் பற்றிய விமர்சனம்:

1 . கத்ரிய்யா கொள்கையுடைவர்.

2 . ஷீயா கொள்கையுடைவர்.

3 . இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் இவர் தத்லீஸ்  செய்பவர் என்று கூறியுள்ளனர்.

மேலும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், ஹதீஸ்கலை இமாம்கள் இவர் விசயத்தில் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர். இவரை (ஹதீஸில்) ஆதாரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றவர்கள் இவர் போன்று அறிவித்துள்ளனரா? என்று பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

4 . சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார்.

5 . சில செய்திகளை பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார்.

6 . இஸ்ராயீலீ அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

7 . ஒரு ஹதீஸை பல ஆசிரியர்களிடமிருந்து அறிவிக்கும் போது ஆசிரியர்களின் வார்த்தைகளை பிரித்து அறிவிக்காமல் ஒரே மாதிரி வாக்கிய அமைப்பில் அறிவிப்பார்.

8 . பொய்யர்.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இவர் நம்பகமானவர்; என்றாலும் தத்லீஸ் செய்பவர், பலவீனமானவர்களை மறைத்து அறிவிப்பவர்; வரலாற்று செய்திகளில் இவரை ஏற்கப்படும் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-24/405, தஹ்தீபுத் தஹ்தீப்-3/504, தக்ரீபுத் தஹ்தீப்-1/825, தஃரீஃபு அஹ்லித் தக்தீஸ்-1/168, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/254)

இந்தக் கருத்தில் வேறு சரியான அறிவிப்பாளர்தொடர்களில் ஹதீஸ்கள் வந்துள்ளன.

மேலும் பார்க்க: புகாரி-7288 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.