தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-7639

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது;  தமக்கிடையே பகைமையுள்ள இருமனிதர்களைத் தவிர.

அப்போது அல்லாஹ், வானவர்களிடம் “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள் என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

அறிவிப்பாளர் மஃமர் கூறினார்:

ஸுஹைலைத் தவிர மற்ற அறிவிப்பாளர்கள் “ஒவ்வொரு திங்கள், வியாழக்கிழமைகளில் (ஆதமுடைய மக்களின்) அமல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக்காட்டப்படும் என்று அறிவிக்கின்றனர்.

(முஸ்னது அஹ்மத்: 7639)

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ فِي كُلِّ اثْنَيْنِ وَخَمِيسٍ – قَالَ مَعْمَرٌ: وَقَالَ غَيْرُ سُهَيْلٍ – وَتُعْرَضُ الْأَعْمَالُ فِي كُلِّ اثْنَيْنِ وَخَمِيسٍ، فَيَغْفِرُ اللَّهُ عَزَّ وَجَلَّ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا، إِلَّا الْمُتَشَاحِنَيْنِ، يَقُولُ اللَّهُ لِلْمَلَائِكَةِ: ذَرُوهُمَا حَتَّى يَصْطَلِحَا


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-7639.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7453.




மேலும் பார்க்க: திர்மிதீ-747 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.