ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் (பனூ இஸ்ரவேலர்களுக்கு வழங்கப்பட்ட) மன்னு என்ற வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணம் ஆகும்.
அஜ்வா பேரீத்தம்பழம் சொர்க்கத்தை சேர்ந்ததாகும். அதில் விஷத்திற்கு நிவாரணம் இருக்கிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 8002)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْكَمْأَةُ مِنَ الْمَنِّ، وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ، وَالْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ، وَمَاؤُهَا شِفَاءٌ مِنَ السُّمِّ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8002.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7804.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19345-ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பற்றி சிலர் பலவீனமானவர் என்றும் சிலர் பலமானவர் என்றும் கூறியுள்ளனர். இவரைப்பற்றி தனியாக ஆய்வுசெய்த சிலர் இவரை சுமாரானவர் என்ற பட்டியலில் கூறுகின்றனர். இவரின் செய்திகளில் வேறு குறைகள் இல்லாவிட்டால் அது ஹஸன் தரம் என்றும் கூறுகின்றனர்…
- தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இந்தக் கருத்தில் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் வழியாக வரும் அனைத்து அறிவிப்பாளர்தொடர்களையும் கூறிவிட்டு ஷஹ்ர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-2098)
மேலும் பார்க்க: திர்மிதீ-2066 .
சமீப விமர்சனங்கள்