தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-8003

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நின்று பருகக்கூடிய ஒரு மனிதரை நபி (ஸல்) அவர்கள் பார்த்த போது வாந்தி எடு என்று (பருகியவரைப் பார்த்துக்) கூறினார்கள். அவர் ஏன் என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீயும் பூனையும் ஒன்றாக சேர்ந்து பருகுவதை விரும்புவீரா என்று கேட்டார்கள். அவர் விரும்ப மாட்டேன் என்று கூறினார். (நீ நின்று குடித்த போது) பூனையை விட மோசமான ஷைத்தான் உன்னுடன் சோ்ந்து பருகினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 8003)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَبِي زِيَادٍ الطَّحَّانِ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

أَنَّهُ رَأَى رَجُلًا يَشْرَبُ قَائِمًا، فَقَالَ لَهُ: «قِهِ» قَالَ: لِمَهْ؟ قَالَ: «أَيَسُرُّكَ أَنْ يَشْرَبَ مَعَكَ الْهِرُّ؟» قَالَ: لَا. قَالَ: «فَإِنَّهُ قَدْ شَرِبَ مَعَكَ مَنْ هُوَ شَرٌّ مِنْهُ، الشَّيْطَانُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-7662.
Musnad-Ahmad-Shamila-8003.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-7805.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-2102-அபூஸியாத்-அத்தஹ்ஹான் (ஸஹ்ல் பின் தஹ்ஹான்) அவர்களைப் பற்றி தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளார்.
  • மேலும் ஷுஃபா அவர்களின் (கரீபான) அரிதான செய்திகளில் இவரின் அறிவிப்பையும் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்கள் பதிவு செய்துள்ளார் என்று குறிப்பிடுகிறார்.

(நூல்: லிஸானுல் மீஸான்-8864)


1 . என்றாலும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
இவரைப் பற்றி பலமானவர் என்று கூறியுள்ளார்.

2 . அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவரைப் பற்றி ஷைக், ஸாலிஹுல் ஹதீஸ் என்று கூறியுள்ளார். 

(இதற்கு இரு பொருள் உள்ளது.

  • இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளலாம். தனி ஆதாரமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றவர்கள் இவர் போன்று அறிவித்துள்ளனரா என்று பார்க்க வேண்டும்.
  • இவரின் செய்தியை தனி ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம்.)

3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன் என்று கூறியதாக அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜரஹ் வத்தஃதீல்-1723, தஃஜீலுல் மன்ஃபஆ-1276, அல்குனா-தூலாபீ-1/403, அல்ஜாமிஉ லிஉலூமில் இமாம் அஹ்மத்-1170)

  • இதனடிப்படையில் ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள் இந்த செய்தியை அரிதான செய்தி என்று கூறியுள்ளார். சரியானது என்றோ அல்லது ஹஸன் தரம் என்றோ கூறவில்லை.
  • ஆனால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம் அவர்களின் கருத்தை மறுத்து முற்கால அறிஞர்களான இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்றோரின் நற்சான்றிதல் படி இந்த செய்தியை சரியானது எனக் கூறியுள்ளார். மேலும் நின்று அருந்துவதின் மார்க்க சட்டத்தையும் விளக்கியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-175-177)


மேலும் பார்க்க: ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2100 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.