அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றார். அவரின் (உடல்) ஆரோக்கியத்தையும், பலத்தையும் கண்டு நபி (ஸல்) அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
எனவே அவரை கூப்பிட்டு அவரிடம், “எப்போதாவது உமக்கு உம்மு மில்தம் ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கவர் உம்மு மில்தம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் என்று பதிலளித்தார்கள். அதற்கவர், காய்ச்சல் என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “தோலுக்கும் எழும்புக்கும் இடையில் ஏற்படும் சூடு” என்று கூறினார்கள். அந்த கிராமவாசி இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள், அவரிடம் “உமக்கு எப்போதாவது தலைவலி(யாவது) ஏற்பட்டதுண்டா? என்று கேட்டார்கள். அதற்கவர், தலைவலி என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “மனிதனின் இரு நெற்றிப்பொட்டிலும், தலையிலும் ஏற்படும் வலி” என்று கூறினார்கள். அதற்கு அந்த கிராமவாசி, “இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை” என்று கூறினார். பிறகு அவர் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளில் ஒரு மனிதரைக் காண விருப்பமுள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 8794)حَدَّثَنَا خَلَفُ بْنُ الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:
مَرَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيٌّ أَعْجَبَهُ صِحَّتُهُ وَجَلَدُهُ، قَالَ: فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَتَى حَسَسْتَ أُمَّ مِلْدَمٍ؟» قَالَ: وَأَيُّ شَيْءٍ أُمُّ مِلْدَمٍ؟ قَالَ: «الْحُمَّى» ، قَالَ: وَأَيُّ شَيْءٍ الْحُمَّى؟ قَالَ: «سَخَنَةٌ تَكُونُ بَيْنَ الْجِلْدِ وَالْعِظَامِ» ، قَالَ: مَا بِذَاكَ لِي عَهْدٌ، قَالَ: «فَمَتَى حَسَسْتَ بِالصُّدَاعِ؟» قَالَ: وَأَيُّ شَيْءٍ الصُّدَاعُ؟ قَالَ: «ضَرَبَانٌ يَكُونُ فِي الصُّدْغَيْنِ، وَالرَّأْسِ» ، قَالَ: مَا لِي بِذَاكَ عَهْدٌ، قَالَ: فَلَمَّا قَفَّى، أَوْ وَلَّى الْأَعْرَابِيُّ، قَالَ: «مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ، فَلْيَنْظُرْ إِلَيْهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8794.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8595.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46292-நஜீஹ் பின் அப்துர்ரஹ்மான்-அபூமஃஷர் நல்லவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், பலவீனமானவர் என்றும், அறிவிப்பாளர்தொடரில் தவறிழைப்பவர் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/214, தக்ரீபுத் தஹ்தீப்-1/998)
மேலும் பார்க்க: அஹ்மத்-8395 .
சமீப விமர்சனங்கள்