அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை” என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 9148)حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْعَبَّاسِ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُوَيْسٍ قَالَ: قَالَ الزُّهْرِيُّ: إِنَّ أَبَا عُبَيْدٍ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِنَّهُ لَيُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، فَيَقُولُ: قَدْ دَعَوْتُ رَبِّي فَلَمْ يَسْتَجِبْ لِي
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-9148.
Musnad-Ahmad-Alamiah-8784.
Musnad-Ahmad-JawamiulKalim-8941.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . இப்ராஹீம் பின் அபுல்அப்பாஸ்
3 . அப்துல்லாஹ் பின் உவைஸ்
4 . ஸுஹ்ரீ இமாம்
5 . அபூஉபைத்-ஸஃத் பின் உபைத்
6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24945-அபூஉவைஸ்-அப்துல்லாஹ் பின் உவைஸ்-அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உவைஸ் என்பவர் பற்றி இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் பலமானவர் என்று கூறியுள்ளார். - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவரைப் பற்றி கூறிய கருத்துக்களை அவரின் மாணவர்கள் பலவாறு அறிவித்துள்ளனர்… - அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள், இவரை பலமானவர் என்றும் சுமாரானவர் என்றும் கூறியதாக அவரின் மாணவர்கள் அறிவித்துள்ளனர். வேறு சிலர் பலவீனமானவர் என்று கூறியதாக அறிவித்துள்ளனர். - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவரைப் போன்று மற்ற பலமானவர்கள் அறிவித்தால் ஏற்கலாம் என்றும்; அதல்லாத செய்திகளை ஏற்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். - இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவரின் சில செய்திகள் மற்ற பலமானவர்கள் அறிவித்ததைப் போன்று உள்ளது. சில செய்திகள் மற்ற பலமானவர்களுக்கு மாற்றமாக உள்ளது. இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். - நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு அப்தில்பர் போன்றோர் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதால் சில செய்திகளை தவறாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளனர். - தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இவர் ஸுஹ்ரீ அவர்கள் வழியாக அறிவிக்கும் சில செய்திகளில் தவறு உள்ளது என்று கூறியுள்ளார். - இப்னு அப்துல்பர் அவர்கள், இவரின் நம்பகத்தன்மையை யாரும் விமர்சிக்கவில்லை. நினைவாற்றல் சரியில்லாததால் சில செய்திகளை தவறாக அறிவித்துள்ளார் என்பதையே விமர்சித்துள்ளனர் என்றும், ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் இவர் மற்றவர்களைப் போன்று அறிவிக்கும் செய்திகளை ஏற்கலாம் என்றும் கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை ஸதூக்-உண்மையாளர், சில செய்திகளில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார். - (இவர் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். இவர் ஸுஹ்ரீ இமாமிடமிருந்து அறிவிப்பதை, ஸுஹ்ரீ இமாமிடமிருந்து மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் அறிவிப்பதைப் போன்றது என்றும் சிலர் கூறியுள்ளனர்.)
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/92, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/300, தஹ்தீபுல் கமால்-15/166, அல்இக்மால்-8/15, அல்காஷிஃப்-3/136, தஹ்தீபுத் தஹ்தீப்-2/366, தக்ரீபுத் தஹ்தீப்-1/518)
எனவே இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவைகளாகும். மற்றவை வேறு குறைகள் இல்லாவிட்டால் சரியானவைகளாகும். இதை ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து மற்றவர்களும் அறிவித்துள்ளனர் என்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-6340.
சமீப விமர்சனங்கள்