பாடம் 44
தொழுகையை ஆரம்பிக்கும் முறை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தால் தன் தோல் புஜத்திற்கு நேராக தன் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து தன் தலையை உயர்த்தினால் மீண்டும் அவ்வாறே கைகளிரண்டையும் உயர்த்துவார்கள். மேலும் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வலகல் ஹம்து’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான். எங்கள் இறைவா! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள். ஸஜ்தா செய்யும் சமயம் (கைகளை உயர்த்தும்) அந்த செயலை செய்ய மாட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(முஅத்தா மாலிக்: 196)44- بَابُ افْتِتَاحِ الصَّلَاةِ
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ: إِذَا افْتَتَحَ الصَّلَاةَ، رَفَعَ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا، وَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الْحَمْدُ» وَكَانَ لَا يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-196.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-160.
சமீப விமர்சனங்கள்