காலித் பின் மஃதான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் நளினமானவன். எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அவன் விரும்புகிறான்…
இரவில் பயணம் மேற்கொள்ளுங்கள். ஏனெனில் பகலைவிட இரவு நேரத்தில் தான் பூமி சுருட்டப்படுகிறது (சுருக்கப்படுகிறது)…என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஅத்தா மாலிக்: 2804)67- مَا يُؤْمَرُ بِهِ مِنَ الْعَمَلِ فِي السَّفَرِ.
حَدَّثَنِي مَالِكٌ، عَن أَبِي عُبَيْدٍ، مَوْلَى سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ، عَن خَالِدِ بْنِ مَعْدَانَ يَرْفَعُهُ قَالَ:
إِنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ، وَيَرْضَى بِهِ، وَيُعِينُ عَلَيْهِ مَا لاَ يُعِينُ عَلَى الْعُنْفِ، فَإِذَا رَكِبْتُمْ هَذِهِ الدَّوَابَّ الْعُجْمَ، فَأَنْزِلُوهَا مَنَازِلَهَا، فَإِنْ كَانَتِ الأَرْضُ جَدْبَةً، فَانْجُوا عَلَيْهَا بِنِقْيِهَا، وَعَلَيْكُمْ بِسَيْرِ اللَّيْلِ، فَإِنَّ الأَرْضَ تُطْوَى بِاللَّيْلِ، مَا لاَ تُطْوَى بِالنَّهَارِ، وَإِيَّاكُمْ وَالتَّعْرِيسَ عَلَى الطَّرِيقِ، فَإِنَّهَا طُرُقُ الدَّوَابِّ، وَمَأْوَى الْحَيَّاتِ.
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-2804.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-1770.
إسناد ضعيف لأن به موضع إرسال ، وباقي رجاله ثقات
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் காலித் பின் மஃதான் நபித்தோழர் அல்ல என்பதால் இவர் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்டிருக்க முடியாது. இவர் சில செய்திகளை நபித்தோழரை விட்டு அறிவித்துள்ளார் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1 / 291 ) - எனவே இடையில் ஒரு நபித்தோழரோ, அல்லது நபித்தோழரும், தாபிஈ யும் விடுபட்டிருக்க வாய்ப்புள்ளதால் இது முர்ஸல் அல்லது முன்கதிஃ என்ற வகையில் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- இந்த செய்தியை அபூஸுர்ஆ அவர்கள் முர்ஸல் என்றும், இப்னு அப்தில்பர் அவர்கள் முன்கதிஃ என்றும் கூறியுள்ளனர்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-2511 (6/266), இஸ்தித்கார்-27/274)
2 . இந்தக் கருத்தில் காலித் பின் மஃதான் (ரஹ்), மஃதான் பின் அபூகரிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-2804 , இப்னு அபீ ஷைபா-25310 , அல்முஃஜமுல் கபீர்-7477 ,
…அல்முஃஜமுல் கபீர்-852 ,
…முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-9251 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-2571 .
சமீப விமர்சனங்கள்