தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-32

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அத்தியாயம்: 2

பாடம்: 9

சுத்தம் – ஒளுச் செய்தல்

நபி(ஸல்) அவர்கள் எப்படி ஒளுச் செய்தார்கள் என்பதை எனக்கு கூற இயலுமா? என்று நபித்தோழர் அப்துல்லா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம் என் தந்தை யஹ்யா கேட்டார்கள். இயலும் என்று கூறிய அப்துல்லா இப்னு ஸைத்(ரலி) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் செய்து, தன் கையில் ஊற்றி இரண்டு முறை கைகளைக் கழுவினார்கள். பின்பு வாய் கொப்பளித்தார்கள். மூன்று தடவை மூக்கைச் சுத்தப்படுத்தினார்கள். பின்பு மூன்று தடவை தன் முகத்தைக் கழுவினார்கள். பின்பு இரண்டிரண்டு தடவை முழங்கை வரை கைகளைக் கழுவினார்கள். பின்பு தான் (ஈரக்) கைகளால் தன் தலைக்கு மஸஹ் செய்தார்கள். அப்போது அந்த (கை) இரண்டையும் (தலையில்) முன்னோக்கி பின்னாக்கினார்கள். (அதாவது) தன் தலையின் முன் பகுதியில் ஆரம்பித்து (கை) இரண்டையும் பிடாரி வரைக் கொண்டு வந்து, மீண்டும் தான் ஆரம்பித்த (முன் நெற்றி) பகுதிக்கே கொண்டு அல் மாஸின் அவர்கள் கூறுகின்றார்கள்.

(இச் சம்பவம் வேறு வார்த்தைகளால் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதீயில் உள்ளது).

(முஅத்தா மாலிக்: 32)

2 – كِتَابُ الطَّهَارَةِ

9- بَابُ الْعَمَلِ فِي الْوُضُوءِ

حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ

أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ، وَهُوَ جَدُّ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ تَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟ فَقَالَ: عَبْدُ اللَّهِ بْنُ زَيْدِ بْنِ عَاصِمٍ: نَعَمْ. فَدَعَا بِوَضُوءٍ. «فَأَفْرَغَ عَلَى يَدِهِ، فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ تَمَضْمَضَ، وَاسْتَنْثَرَ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ مَسَحَ رَأْسَهُ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ، ثُمَّ ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا، حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-32.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-186 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.