தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-3338

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதை பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்). 2 . அவனுடைய நபியின் வழிமுறைகள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தி நமக்கு கிடைத்தது என மாலிக் (ரஹ்) கூறினார்கள்.

(முஅத்தா மாலிக்: 3338)

مَالِكٌ؛ أَنَّهُ بَلَغَهُ

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللهِ وَسُنَّةَ نَبِيِّهِ


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-1395.
Muwatta-Malik-Shamila-3338.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-1598.




  • இந்தச் செய்தியை அறிவிக்கும் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) கூறியதாக நமக்கு செய்தி கிடைத்தது என கூறுகிறார்கள். இவர் நபித்தோழர் அல்லர் . மாறாக தபஉத் தாபியீன்களில் உள்ளவராவார்.
  • அதாவது நபிகளாருக்குப் பின் இரண்டு தலைமுறைக்குப் பிறகு வந்தவர்.மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அவர்களுக்கும் நபிகளாருக்கும் இடையில் குறைந்த பட்சம் இரண்டு அறிவிப்பாளர்கள் இருக்க வேண்டும். அந்த இருவர் யார் என்ற விபரம் இல்லை என்பதால் இந்தச் செய்தி முஃளல் என்ற வகையைச் சார்ந்த தொடர்பு அறுந்த செய்தியாகும்.
  • இதன் காரணத்தால் இந்தத் தொடர் பலவீனமானதாகும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.