அபூகதாதா (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்கு ஒளுச் செய்யும் நீரை நான் வார்த்துக் கொடுத்தேன். அப்போது ஒரு பூனை அதை குடிக்க வந்தது. அது குடித்து முடியும் வரை பாத்திரத்தை (குடிப்பதற்கு ஏற்றவாறு) சாய்த்துக் கொண்டிருந்தார். அவரை நான் கூர்ந்து நோக்குவதைக் கண்ட போது, ” என் சகோதரர் மகனே..! நீ வியப்படைகிறாயா?””, என்று கேடடார். ‘ஆம்” என்றேன். ”பூனைகள் அசுத்தமானவைகள் அல்ல – அவை உங்களைச் சுற்றி வரக் கூடியவைகளே (அண்டி வாழ்பவைகளே)”” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என அபூகதாதா(ரலி) கூறினார்கள். இதை கஹ்பு இப்னு மாலிக்(ரலி) அவர்களின் மகளும், அபூகதாதா(ரலி) அவர்களின் மகனின் மனைவியுமான கப்ஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது அஹ்மத், திர்மிதீ, இப்னு மாஜா, நஸயீயிலும் உள்ளது)
அந்தப் பூனையின் வாயில் அசுத்தம் காணப்பட்டாலே தவிர. இதனால் குற்றமில்லை என மாலிக் (ரஹ்) கூறியதாகக யஹ்யா கூறுகிறார்கள்.
(முஅத்தா மாலிக்: 46)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ حُمَيْدَةَ بِنْتِ [ص:23] عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ خَالَتِهَا كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ
وَكَانَتْ تَحْتَ ابْنِ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ، أَنَّهَا أَخْبَرَتْهَا: أَنَّ أَبَا قَتَادَةَ دَخَلَ عَلَيْهَا فَسَكَبَتْ لَهُ وَضُوءًا، فَجَاءَتْ هِرَّةٌ لِتَشْرَبَ مِنْهُ، فَأَصْغَى لَهَا الْإِنَاءَ حَتَّى شَرِبَتْ. قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ. فَقَالَ: أَتَعْجَبِينَ يَا ابْنَةَ أَخِي؟ قَالَتْ: فَقُلْتُ: نَعَمْ. فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ – أَوِ الطَّوَّافَاتِ -»
قَالَ يَحْيَى: قَالَ مَالِكٌ: «لَا بَأْسَ بِهِ إِلَّا أَنْ يُرَى عَلَى فَمِهَا نَجَاسَةٌ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-46.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்