உஸ்மான்(ரலி) அவர்கள் திண்ணையில் அமர்ந்திருந்தார்கள். அதுசமயம் பாங்கு கூறுபவர் வந்து அவர்களை அஸர் தொழுகைக்காக அழைத்தார். உடனே தண்ணீர் வரவழைத்து ஒளுச் செய்தார்கள். அலலாஹ்வின் மீது சத்தியமாக, நான் உங்களுக்கு ஒரு ஹதீஸைத் தொரிவிக்கிறேன். அல்லாஹ்வின் வேதத்தில் அது இல்லை என்றால் நான் இதை உங்களுக்கு தொரிவித்திருக்க மாட்டேன் என்று உதுமான்(ரலி) கூறினார்கள். பின்பு, ”ஒருவர் ஒளுச் செய்து, அந்த ஒளுவையும் அழகாகச் செய்து, பின்பு தொழுதால், அந்த தொழுகைக்கும், அந்தத் தொழுகைக்கு இடைப்பட்ட (நேரத்)தில் உள்ள (குற்றத்)தை மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி, தான் கேட்டதாக உஸ்மான்(ரலி) அவர்கள் கூறினார்கள் என அவர்களின் அடிமை ஹம்ரான் கூறுகின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 65)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ
أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ جَلَسَ عَلَى الْمَقَاعِدِ. فَجَاءَ الْمُؤَذِّنُ فَآذَنَهُ بِصَلَاةِ الْعَصْرِ. فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ. ثُمَّ قَالَ: وَاللَّهِ لَأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا، لَوْلَا أَنَّهُ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُكُمُوهُ. ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنِ امْرِئٍ يَتَوَضَّأُ، فَيُحْسِنُ وُضُوءَهُ، ثُمَّ يُصَلِّي الصَّلَاةَ، إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلَاةِ الْأُخْرَى حَتَّى يُصَلِّيَهَا» قَالَ يَحْيَى: قَالَ مَالِكٌ: «أُرَاهُ يُرِيدُ هَذِهِ الْآيَةَ» {أَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ، إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ} [هود: 114]
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-65.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்