ஒரு முஸ்லிம் அடியான் ஒளுச் செய்யும் சமயம் முகத்தைக் கழுவினால் அவன் தன் இரு கண்களால் பார்த்த தவறுகள் அனைத்தும் (கழுவிய) தண்ணீருடன் முகத்தில் இருந்து வெளியேறி விடும். அவன் தன் இரு கைகளைக் கழுவினால் (கழுவிய) தண்ணீருடன் அவன் தன் கைகளால் செய்த தவறுகள் அனைத்தும் அவனது கைகளில் இருந்து வெளியேறி விடும். இறுதியில் பாவங்களில் இருந்து சுத்தமாக வெளியேறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு: ”ஒரு முஸ்லிம்”” என்ற வார்த்தைக்குப் பதிலாக ”ஒரு முஃமின்”” என்றும், ”தண்ணீருடன்”” என்ற வார்த்தைக்குப் பதிலாக ”தண்ணீரின் கடைசிச் சொட்டுடன்”” என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்கலாம் என அறிவிப்பாளர் தன் சந்தேகத்தை இங்கே வெளிப்படுத்துகிறார். (இது முஸ்லிம், திர்மிதியில் உள்ளது).
(முஅத்தா மாலிக்: 67)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ أَوِ الْمُؤْمِنُ فَغَسَلَ وَجْهَهُ، خَرَجَتْ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ، فَإِذَا غَسَلَ يَدَيْهِ، خَرَجَتْ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ. فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ كُلُّ خَطِيئَةٍ مَشَتْهَا رِجْلَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ. حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنَ الذُّنُوبِ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-67.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்