தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-83

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒருவர் தொழுகைக்கு ஒளுச் செய்கின்றார். பின்பு தன் காலுறைகளை அணிந்து கொண்டார். பின்பு சிறுநீர் கழித்தார். பின்பு காலுறை இரண்டையும் கழட்டிய பிறகு தன் கால்களில் மீண்டும் மாட்டிக் கொண்டார். இவர் ஒளுவை முறையாகச் செய்தவர் ஆவாரா? என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ”தன் காலுறைகளை கழற்றி விட்டு, தன் கால்களைக் கழுவட்டும்! ஒளுச் செய்த நிலையில் தன் கால்களை காலுறைகளில் நுழைத்தவாரே காலுறை மீது மஸஹ் செய்ய வேண்டும். ஒளு இல்லாமல் தன் கால்களை காலுறைகளுக்குள் நுழைத்தவர், காலுறைகள் மீது மஸஹ் செய்ய மாட்டார்”” என்று பதில் கூறினார்கள் என யஹ்யா கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 83)

قَالَ يَحيَى: وَسُئِلَ مَالِكٌ عَن رَجُلٍ تَوَضَّأَ وُضُوءَ الصَّلاَةِ، ثُمَّ لَبِسَ خُفَّيْهِ، ثُمَّ بَالَ، ثُمَّ نَزَعَهُمَا، ثُمَّ رَدَّهُمَا فِي رِجْلَيْهِ، أَيَسْتَأْنِفُ الْوُضُوءَ؟ فَقَالَ: لِيَنْزِعْ خُفَّيْهِ، ثُمَّ لِيَتَوَضَّأَ وَلْيَغْسِلْ رِجْلَيْهِ، وَإِنَّمَا يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ مَنْ أَدْخَلَ رِجْلَيْهِ فِي الْخُفَّيْنِ وَهُمَا طَاهِرَتَانِ بِطُهْرِ الْوُضُوءِ، فَأَمَّا مَنْ أَدْخَلَ رِجْلَيْهِ فِي الْخُفَّيْنِ وَهُمَا غَيْرُ طَاهِرَتَيْنِ بِطُهْرِ الْوُضُوءِ، فَلاَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-83.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.