உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் நான் பிரார்த்தனை செய்து கேட்கும் வாசகங்களை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 10 தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று கூறு! 10 தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறு! 10 தடவை அல்லாஹு அக்பர் என்று கூறு! பின்னர் உனது தேவையை (அல்லாஹ்விடம்) கேள்! அல்லாஹ், “சரி; சரி (நான் அதை விரைவில் நிறைவேற்றுகிறேன்) என்று கூறுவான்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(நஸாயி: 1299)أَخْبَرَنَا عُبَيْدُ بْنُ وَكِيعِ بْنِ الْجَرَّاحِ – أَخُو سُفْيَانَ بْنِ وَكِيعٍ – قَالَ : حَدَّثَنَا أَبِي ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :
جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ : يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي كَلِمَاتٍ أَدْعُو بِهِنَّ فِي صَلَاتِي، قَالَ : ” سَبِّحِي اللَّهَ عَشْرًا، وَاحْمَدِيهِ عَشْرًا، وَكَبِّرِيهِ عَشْرًا، ثُمَّ سَلِيهِ حَاجَتَكِ، يَقُلْ : نَعَمْ نَعَمْ
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1299.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1283.
அஸ்ஸலாமு அலைக்கும்
It was narrated that Anas bin Malik said:
“Umm Sulaim came to the Prophet (ﷺ) and said: ‘O Messenger of Allah (ﷺ), teach me some words that I may supplicate with during my prayer.’ He said: ‘Glorify Allah (by saying SubhanAllah) ten times, and praise Him (by saying Alhamdulilah) ten times, and magnify Him (by saying Allahu Akbar) ten times, then ask Him for what you need; He will say: ‘Yes, yes.’
Sunan nasai 1299
இந்த ஹதீஸை தமிழில் பதிவிடுங்கள்
வ அலைக்கும் ஸலாம். இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.
ஜஸாக்கல்லஹ் ஹைர்
He will say: ‘Yes, yes.
என்ற வாசகம் ஆங்கிலத்தில் இருக்கிறது ஆனால் தமிழில் பதிவு செய்ய படவில்லையே ஏன்? அரபியில் இந்த வாசகம் இல்லையா ?
இந்த வாசகத்தின் பொருள் தற்போது சேர்க்கப்பட்டுவிட்டது.
Alhamdulillah