…
உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நான் பிரார்த்தனை செய்து கேட்கும் வாசகங்களை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், 10 தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று கூறு! 10 தடவை அல்ஹம்து லில்லாஹ் என்று கூறு! 10 தடவை அல்லாஹு அக்பர் என்று கூறு! பின்னர் உனது தேவையை (அல்லாஹ்விடம்) கேள்!
(இவ்வாறு செய்தால்) அல்லாஹ், “நான் அதை விரைவில் நிறைவேற்றுகிறேன் என்று கூறுகிறான்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 12207)حَدَّثَنَا وَكِيعٌ ، حَدَّثَنِي عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ :
جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ : يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي كَلِمَاتٍ أَدْعُو بِهِنَّ. قَالَ : ” تُسَبِّحِينَ اللَّهَ عَشْرًا، وَتَحْمَدِينَهُ عَشْرًا، وَتُكَبِّرِينَهُ عَشْرًا، ثُمَّ سَلِي حَاجَتَكِ ؛ فَإِنَّهُ يَقُولُ : قَدْ فَعَلْتُ، قَدْ فَعَلْتُ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-12207.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இக்ரிமா பின் அம்மார் —> இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-12207, திர்மிதீ-481, குப்ரா நஸாயீ-, நஸாயீ-1299, இப்னு குஸைமா-, இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-,
…
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா-,
சமீப விமர்சனங்கள்