தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1574

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஸிமாக் பின் ஹர்ப் (ரஹ்)அறிவித்தார்:

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் உரையை நின்றவாறு நிகழ்த்துவார்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,  நபி (ஸல்) அவர்கள் உரையை நின்றவாறு நிகழ்த்தி பிறகு சிறிது உட்கார்ந்து பிறகு எழுந்து உரை நிகழ்த்துவார்கள்; என்று கூறினார்கள்.

(நஸாயி: 1574)

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكٍ، قَالَ

سَأَلْتُ جَابِرًا أَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ قَائِمًا؟، فَقَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَخْطُبُ قَائِمًا، ثُمَّ يَقْعُدُ قَعْدَةً، ثُمَّ يَقُومُ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1574.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1562.




[حكم الألباني] صحيح

இந்த ஹதீஸ் சரியானதாகும்.

இந்த ஹதீஸில் கூறப்படும் உரை எந்த உரை என்று கூறப்படாவிட்டாலும் மற்ற ஹதீஸ்களில் பார்க்கும் போது ஜுமுஆ உரை என்று தெரிகிறது. இப்னு மாஜா 1289 இல் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் உரை நிகழ்த்தினார்கள். பிறகு சற்று உட்கார்ந்து விட்டு எழுந்து நின்றார்கள் என்று வருகிறது. ஆனால் இது பலவீனமான செய்தியாகும்.

பார்க்க-இப்னு மாஜா-1289.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.