தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1710

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஏழு ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)

(நஸாயி: 1710)

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، قَالَ: حَدَّثَنِي ضُبَارَةُ بْنُ أَبِي السَّلِيلِ، قَالَ: حَدَّثَنِي دُوَيْدُ بْنُ نَافِعٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الْوِتْرُ حَقٌّ، فَمَنْ شَاءَ أَوْتَرَ بِسَبْعٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِخَمْسٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِثَلَاثٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِوَاحِدَةٍ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1710.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1699.




إسناده ضعيف ويحسن إذا توبع

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ளுபாரா பின் அபூ ஸலீல் பற்றி சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் அறியப்படாதவர் என்றும் கூறியுள்ளனர். எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
  • இவரின் பெயர் பல வார்த்தை அமைப்புகளில் வந்துள்ளது.
  1. ளுபாரா பின் அப்துல்லாஹ், 2. ளுபாரா பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    ஹழ்ரமீ, 3. ளுபாரா பின் அபூ ஸலீல், 4. ளுபாரா பின் அபூ ஸுலைக், 5. ளுபாரா பின் அப்துல்லாஹ் பின் அபூ ஸலீல், 6. ளுபாரா பின் அப்துல்லாஹ் பின் அபூ ஸுலைக். 7. ளுபாரா பின் அப்துல்லாஹ் பின் அபூ ஸுலைக் அல்ஹானீ, 8. அபூஷுரைஹ் ளுபாரா, 9. ளுபாரா .

مجهول
تقريب التهذيب: (1 / 457)

மேலும் பார்க்க: அபூதாவூத்-1422 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.