தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1422

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1422. “வித்ரு தொழுகை முஸ்லிமான அனைவரின் மீதும் கடமையாகும். ஐந்து ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; மூன்று ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; ஒரு ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்;

அறிவிப்பவர்: (ரலி)

அபூஅய்யூப் (ரலி)

أبو أيوب الأنصاري

இறப்பு: ஹிஜ்ரி 52, குஸ்தன்தீனியா

தரம்: நபித்தோழர்


விபரங்கள்

இயற்பெயர்: காலித் பின் ஸைத்

தந்தை பெயர்: ஸைத் பின் குலைப்

வம்சம்: கஸ்ரஜ், பனூ மாலிக் பின் அன்நஜ்ஜார்

புனைப்பெயர்: அபூஅய்யூப்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, ஈராக், எகிப்து, குஸ்தன்தீனியா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 52, குஸ்தன்தீனியா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூஅய்யூப் அல்அன்ஸாரீ ரலி அவர்களின் இயற்பெயர் காலித் பின் ஸைத் ஆகும். இவர் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்த அன்ஸாரீ நபித்தோழர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் வந்தபோது, அபூஅய்யூப் ரலி அவர்களின் வீட்டில்தான் ஒரு மாதம் தங்கினார்கள்.

பத்ரு, உஹது, அகழ் மற்றும் அனைத்துப் போர்களிலும் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டார். முஆவியா ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில் ரோமப் பகுதியில் போர் புரிந்துகொண்டிருந்தபோது ஹிஜ்ரி 52 ஆம் ஆண்டு குஸ்தன்தீனியாவில் மரணமடைந்தார். அவரது கப்ரு குஸ்தன்தீனியா கோட்டையின் சுவரருகே உள்ளது.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உபை பின் கஅப்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): பராஉ பின் ஆஸிப், ஜாபிர் பின் ஸம்ரா, ஸைத் பின் காலித் அல்ஜுஹ்னீ, இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ, மிக்ராத் பின் மஃதீகரிப், ஸயீத் பின் அல்முஸய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர், மூஸா பின் தல்ஹா, அதா பின் யஸார், அப்துல்லாஹ் பின் ஹுனைன், அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா

வேறு பெயர்கள்: காலித் பின் ஸைத், அபூ அய்யூப் அல்அன்ஸாரீ


ஆதாரம்: muslimscholars.info (33) · Should verify


حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنِي قُرَيْشُ بْنُ حَيَّانَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا بَكْرُ بْنُ وَائِلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«الْوِتْرُ حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ، فَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِخَمْسٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِثَلَاثٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيَفْعَلْ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1212.
Abu-Dawood-Shamila-1422.
Abu-Dawood-Alamiah-1212.
Abu-Dawood-JawamiulKalim-1214.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


  • இந்தக் கருத்தில் அபூ அய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகளில் சிலவை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும், சிலவை அபூ அய்யூப் (ரலி) அவர்களின் சொல்லாகவும் வந்துள்ளது. இவைகளில்  அபூ அய்யூப் (ரலி) அவர்களின் சொல்லாக வருவதே சரியானது என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் கூறியுள்ளார்.

3 . இந்தக் கருத்தில் அபூ அய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . வித்ரு தொழுகை பற்றி:

பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-6859, இப்னு மாஜா-1190, அபூதாவூத்-1422, நஸாயீ-1710, 1711, 1712, அல்முஃஜமுல் கபீர்-3961, 3962, 3965, 3966, தாரகுத்னீ-1640, 1641, 1642, 1643, இப்னு ஹிப்பான்-2410, ஹாகிம்-1128, 1129, 1130, …


மேலும் பார்க்க : முஸ்லிம்-1341 .


2 . சைகை செய்து தொழுவது பற்றி:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-4633,


இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக சைகை செய்து தொழுவது பற்றி:

பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-2829,


சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-1117.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.