தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-4633

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

“வித்ரு தொழுகை முஸ்லிமான அனைவரின் மீதும் கடமையாகும். ஐந்து ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; மூன்று ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; ஒரு ரக்அத் வித்ர் தொழ விருப்பமுள்ளவர் ஒரு ரக்அத் வித்ர் தொழட்டும்; முடியாதவர் சைகை செய்து (தொழுது) கொள்ளட்டும்” என அபூ அய்யூப் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அதாஉ பின் யஸீத் (ரஹ்)

 

(musannaf-abdur-razzaq-4633: 4633)

عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ قَالَ:

«الْوِتْرُ حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ، فَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِخَمْسِ رَكَعَاتٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِثَلَاثٍ فَلْيَفْعَلْ، وَمَنْ أَحَبَّ أَنْ يُوتِرَ بِوَاحِدَةٍ فَلْيَفْعَلْ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ إِلَّا أَنْ يُومِئَ إِيمَاءً فَلْيَفْعَلْ»،


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-4633.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-4485.




இது மவ்கூஃபான செய்தி.

  • வித்ருத்தொழுகையை சைகை செய்து தொழுவது பற்றி அபூ அய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகளில் சிலவை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும், சிலவை அபூ அய்யூப் (ரலி) அவர்களின் சொல்லாகவும் வந்துள்ளது. இவைகளில்  அபூ அய்யூப் (ரலி) அவர்களின் சொல்லாக வருவதே சரியானது என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் கூறியுள்ளார்.

இந்தக் கருத்தில் அபூ அய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : தயாலிஸீ-594 , ரஸ்ஸாக்-4633 , ஷைபா-6845 , 6846 , அஹ்மத்-23545 , தாரிமீ-1623 , 1624 , நஸாயீ-1713 , அல்முஃஜமுல் கபீர்-3963 , 3964 , 3967 , அல்முஃஜமுல் அவ்ஸத்-1944 , தாரகுத்னீ-1644 , இப்னு ஹிப்பான்-2407 , 2411 , ஹாகிம்-1131 , 1132 , 1133 , 1134 ,

மேலும் பார்க்க : அபூதாவூத்-1422 , ஷைபா-2829 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.