தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1802

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

யார் 12 ரக்அத்கள் தொழுவாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான். (அவை) லுஹருக்கு முன்னர் 4 ரக்அத்கள், லுஹருக்குப் பின்னர் 2 ரக்அத்கள், அஸ்ருக்கு முன்னர் 2 ரக்அத்கள், மஃரிபுக்குப் பின்னர் 2 ரக்அத்கள், சுப்ஹுக்கு முன்னர் 2 ரக்அத்கள் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

(நஸாயி: 1802)

أَخْبَرَنَا أَبُو الْأَزْهَرِ أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ النَّيْسَابُورِيُّ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ الْمُسَيَّبِ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ أُمِّ حَبِيبَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ، أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَاثْنَتَيْنِ بَعْدَهَا، وَاثْنَتَيْنِ قَبْلَ الْعَصْرِ، وَاثْنَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَاثْنَتَيْنِ قَبْلَ الصُّبْحِ» «مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ، أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَاثْنَتَيْنِ بَعْدَهَا، وَاثْنَتَيْنِ قَبْلَ الْعَصْرِ، وَاثْنَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَاثْنَتَيْنِ قَبْلَ الصُّبْحِ»

قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ لَيْسَ بِالْقَوِيِّ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1779.
Nasaayi-Shamila-1802.
Nasaayi-Alamiah-1779.
Nasaayi-JawamiulKalim-1789.




இதில் அபூஇஸ்ஹாக் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் இவர் தத்லீஸ் (இருட்டடிப்பு செய்பவர்) என்று குற்றம் சுமத்தப்பட்டவர்.

الثقات لابن حبان (5/ 177)
4449 – أبو إسحاق السبيعي اسمه عمرو بن عبد الله الهمداني وكان مدلسا

அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ என்பவர் தத்லீஸ் செய்பவர் என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

நூல்: அஸ்ஸிகாத், பாகம்: 5, பக்கம்: 177

ميزان الاعتدال (1/ 460)
قال النسائي – ذكر المدلسين، الحجاج بن أرطاة، والحسن، وقتادة، وحميد، ويونس بن عبيد، وسليمان التيمى، ويحيى بن أبى كثير، وأبو إسحاق

இமாம் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் தத்லீஸ் செய்பவர்களின் பட்டியலில் அபூஇஸ்ஹாக் அவர்களையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்:1, பக்:460

أسماء المدلسين (ص: 77)
41-عمرو بن عبد الله أبو إسحاق مشهور بالتدليس

அம்ர் பின் அப்துல்லாஹ் அபூஇஸ்ஹாக் என்பவர் தத்லீஸ் செய்பவர்களில் பிரபலமானவர் ஆவார்.

நூல்: அஸ்மாவுல் முதல்லிஸீன், பக்கம்: 77

தத்லீஸ் என்பதன் பொருள் மறைத்தல் என்பதாகும். விற்பவரிடம் பொருளின் குறைகளை மறைப்பதை தத்லீஸ் என்று அகராதியில் குறிப்பிடுவர்.

ஹதீஸ் துறையில் தத்லீஸ் என்பது ஒருவர் தன் ஆசிரியரிடமிருந்து சில செய்திகளைக் கேட்டிருப்பார். சில செய்திகளை அவரிடம் நேரடியாகக் கேட்டிருக்கமாட்டார். இந்நிலையில் தான் நேரடியாகக் கேட்டிராத ஒருவரிடம், நேரடியாகக் கேட்டிருப்பதற்கும் கேட்காமலிருப்பதற்கும் வாய்ப்புள்ள வாசகத்தைப் பயன்படுத்திச் சொல்வார். இப்படி அறிவிக்கும் பழக்கமுள்ள ஒருவர் அறிவித்தால் அவர் நேடியாகக் கேட்டேன் என்று தெளிவான வாசகத்தில் அறிவித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஹதீஸ் கலை வல்லுநர்களின் முடிவாகும்.

இந்தச் செய்தியில் ‘நேரடியாகக் கேட்டேன்’ என்ற வாசகம் இல்லாத வார்த்தையை அபூ இஸ்ஹாக் பயன்படுத்தியிருப்பதால் இந்தச் செய்தி பலவீனம் அடைகிறது.

(2.)மேலும் இதில் வரும் ஃபுலைஹ் பின் சுலைமான் என்பவர் பலமானவர் இல்லை என்பதை இந்த செய்தியின் கீழே இமாம் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் பார்க்க: முஸ்லிம்-1319 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.