பாடம்:
மோசடி செய்தவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்துதல்.
கைபர் போரில் ஒருவர் மரணித்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘உங்கள் தோழர் அல்லாஹ்வின் பாதையில் போரிடும் போது மோசடி செய்து விட்டார். எனவே உங்கள் தோழருக்கு நீங்கள் தொழுகை நடத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.
அவரது பொருட்களை நாங்கள் தேடிப் பார்த்தோம். (எதிரிப் படையினரான) ஒரு யூதருக்குச் சொந்தமான இரண்டு திர்ஹம் மதிப்பு கூட இல்லாத ஒரு மாலையை அவரது பொருட்களுடன் கண்டோம்.
அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)
(நஸாயி: 1959)الصَّلَاةُ عَلَى مَنْ غَلَّ
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ أَبِي عَمْرَةَ، عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ قَالَ:
مَاتَ رَجُلٌ بِخَيْبَرَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلُّوا عَلَى صَاحِبِكُمْ إِنَّهُ غَلَّ فِي سَبِيلِ اللَّهِ»، فَفَتَّشْنَا مَتَاعَهُ فَوَجَدْنَا فِيهِ خَرَزًا مِنْ خَرَزِ يَهُودَ مَا يُسَاوِي دِرْهَمَيْنِ
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1933.
Nasaayi-Shamila-1959.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1943.
சமீப விமர்சனங்கள்